கம்லா பெர்சாத் பிசெசார்
கம்லா பெர்சாத் பிசெசார் (Kamla Persad-Bissessar, பிறப்பு: ஏப்ரல் 22 1952[1]) திரினிடாட் டொபாகோ குடியரசின் ஏழாவதும் தற்போதைய பிரதமரும் ஆவார். இவர் நாட்டின் முதலாவது பெண் பிரதமராக 2010, மே 26 ஆம் நாள் பதவியேற்றார்[2][3].
கம்லா பெர்சாத்-பிசெசார் Kamla Persad-Bissessar | |
---|---|
திரினிடாட் டொபாகோவின் பிரதமர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 26 மே 2010 | |
குடியரசுத் தலைவர் | ஜார்ஜ் மாக்சுவெல் ரிச்சார்ட்ஸ் |
முன்னவர் | பாட்ரிக் மானிங் |
திரினிடாட் டொபாகோவின் எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 25 பெப்ரவரி 2010 – 25 மே 2010 | |
முன்னவர் | பாஸ்டியோ பாண்டே |
பின்வந்தவர் | கீத் ராவுலி |
பதவியில் 26 ஏப்ரல் 2006 – 8 நவம்பர் 2007 | |
முன்னவர் | பாஸ்டியோ பாண்டே |
பின்வந்தவர் | பாஸ்டியோ பாண்டே |
ஐக்கிய தேசியக் காங்கிரசின் அரசியல் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 24 சனவரி 2010 | |
முன்னவர் | பாஸ்ட்யோ பாண்டே |
சிப்பாரியா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 1995 | |
முன்னவர் | கோவிந்த்ரா ரூப்நாரின் |
பெரும்பான்மை | 15,808 |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 22 ஏப்ரல் 1952 பெனல், திரினிடாட் டொபாகோ |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் காங்கிரஸ் |
வாழ்க்கை துணைவர்(கள்) | கிரெகரி பிசெசார் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மேற்கிந்தியப் பல்கலைக்கழகம் |
பணி | வழக்கறிஞர் அரசியல்வாதி |
சமயம் | இந்து |
இணையம் | அதிகாரப்பூர்வத் தளம் |
பெர்சாத்-பிசெசார் ஐக்கிய தேசியக் கங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். இது மக்கள் கூட்டமைப்பு என்ற ஐந்து-கட்சிக் கூட்டணியின் முக்கிய தலைமைக் கட்சியாகும். 2010 மே 24 இல் நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் இக்கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.
கம்லா பெர்சாத் நாட்டின் முதலாவது பெண் சட்டமா அதிபராகவும், பதில் பிரதமராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தவர்[4].
வாழ்க்கைக் குறிப்பு
இந்திய வம்சாவழியைச் சேர்ந்த கம்லா, மருத்துவர் கிரெகரி பிசெசார் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு ஒரு மகன் உன்டு. லக்ஷ்மி இந்து மகளிர் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை
கம்லா 1995 ஆம் ஆண்டில் இருந்து சிப்பாரியா தேர்தல் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1995 இல் இருந்து நாட்டின் சட்டமா அதிபராகவும் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டு டிசம்பர் 22 இல் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கட்சி பதவிக்கு வந்த பின்னர் இவர் கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
2010, ஜனவரி 24 இல் இவர் ஐக்கிய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெப்ரவரி 25 இல் இவர் எதிர்க்கட்சித் தலைவரானார்.
பிரதமர்
2010, மே 24 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தேர்தலில் இவரது எதிர்க்கட்சிக் கூட்டணி அப்போதைய பிரதமர் பாட்ரிக் மானிங் இன் ஆளும் கட்சியை தோற்கடித்ததை அடுத்து, கம்லா நாட்டின் முதல் பெண் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
- Sookraj, Radhica (26 மே 2010). "Kamla came from humble beginnings". திரினிடாட் கார்டியன். http://guardian.co.tt/news/general/2010/05/26/kamla-came-humble-beginnings.
- ttgapers.com 2010. PNM lose to Peoples Partnership in Trinidad elections 2010. ttgapers.com மே 24, 2010.
- இந்திய வம்சாவழிப் பெண் திரினிடாட் டொபாகோவின் முதல் பெண் பிரதமராகத் தெரிவு, விக்கி செய்திகள், மே 26, 2010
- "WOMAN POWER: Kamla creates history in TT". கரிபியன் நியூஸ். http://www.cananews.net/news/131/ARTICLE/49722/2010-05-25.html.
வெளி இணைப்புகள்
- அதிகாரபூர்வத் தளம்
- Kamla's Karma - திரினிடாட் எக்ஸ்பிரஸ் ஜூன் 10, 2002.
- Biography.