கம்சாயினி குணரத்தினம்

கம்சாயினி குணரத்தினம் (Khamshajiny Gunaratnam, பிறப்பு: 27 மார்ச் 1988) இலங்கைத் தமிழ் பின்புலம் கொண்ட நோர்வே அரசியல்வாதியும், தொழிற்கட்சியின் உறுப்பினரும், ஒசுலோ மாநகரத் துணை முதல்வரும் ஆவார்.

கம்சாயினி குணரத்தினம்
Khamshajiny Gunaratnam
ஒசுலோ மாநகரத் துணை முதல்வர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
அக்டோபர் 2015
தனிநபர் தகவல்
பிறப்பு 27 மார்ச்சு 1988 (1988-03-27)
யாழ்ப்பாணம், இலங்கை
தேசியம் நோர்வேயர்
அரசியல் கட்சி தொழிற் கட்சி
இருப்பிடம் ஒசுலோ
படித்த கல்வி நிறுவனங்கள் ஓசுலோ பல்கலைக்கழகம்
பணி அரசியல்வாதி
சமயம் இந்து

வாழ்க்கைக் குறிப்பு

கம்சாயினி இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். மூன்று வயதில் பெற்றோருடன் புலம் பெயர்ந்து நோர்வே சென்றார்.[1]. இவர் ஒசுலோ பல்கலைக்கழகத்தில் சமூகப் புவியியலில் பட்டம் பெற்றவர்.[2] 2011 ஆம் ஆண்டில் இடம்பெற்ற நோர்வே தீவிரவாதத் தாக்குதலில் இருந்து உயிர் தப்பியவர். இவர் தாக்குதல் நடைபெற்ற தீவில் இருந்து கடலில் நீந்தி வந்து உயிர் தப்பினார்.[3]

அரசியலில்

கம்சாயினி தொழிற்கட்சியின் ஒசுலோ மாநகரக் கிளை துணைத் தலைவராகவும், இளைஞர் பிரிவுத் தலைவராகவும் உள்ளார். ஒசுலோ மாநகர சபையின் உறுப்பினராக 2007 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன் முதலாக மாநகரசபை உறுப்பினரானார். 2015 அக்டோபர் 21 இல் ஒசுலோ மாநகரசபையின் துணை முதல்வராகப் பதவியேற்றார்.[1][4][5]

மேற்கோள்கள்

  1. SL born Gunaratnam the new deputy mayor of Oslo டெய்லி நியூசு
  2. Ukas student Studenttorget (நோர்வே மொழி)
  3. - Jeg tror mange føler at vi først og fremst er politikere, ikke ofre Dagbladet 4 சூலை 2013 (நோர்வே மொழி)
  4. Kamzy blir Oslos varaordfører Dagbladet 21 அக்டோபர் 2015
  5. Norway: Utoeya survivor becomes Oslo's deputy mayor பிபிசி 22 அக்டோபர் 2015}}
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.