கன அடி

கன அடி அல்லது சேர்த்து எழுதும்போது கனவடி எனப்படுவது, இம்பீரியல் அளவை முறையில் கன அளவை அளப்பதற்குப் பயன்படும் ஒரு அலகு. இது இம்பீரியல் முறையைப் பயன்படுத்தும் ஐக்கிய அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் பொதுவான பயன்பாட்டில் உள்ளது. மெட்ரிக் அளவை முறைக்கு மாறிய ஐக்கிய இராச்சியம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலும் சில தேவைகளுக்கு இது இன்னும் பயன்படுவது உண்டு. ஒரு அடி நீளமும், ஒரு அடி அகலமும், ஒரு அடி உயரமும் கொண்ட கனவளவே ஒரு கன அடி.

அலகு மாற்றம்

  • ஒரு கன அடி = 1,728 சதுர அங்குலம். (12 அங்குலங்கள் (Inches) ஒரு அடி)[1]
  • ஒரு கன அடி = 1/27 கன யார்.
  • ஒரு கன அடி = 0.028316846592 கன மீட்டர்.
  • ஒரு கன அடி = 7.48051948 ஐக்கிய அமெரிக்க கலன்

மேற்கோள்கள்

  1. http://www.asknumbers.com/FeetToInchesConversion.aspx
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.