கதிரேசன் மத்திய கல்லூரி

கதிரேசன் மத்திய கல்லூரி (Kathiresan Central College) இலங்கையின் மத்திய மாகணத்தில் உள்ள பிரபலமான பாடசாலைகளில் ஒன்று.[1] நாவலப்பிட்டியில் அமைந்துள்ள இக்கல்லூரி பத்து தசாப்தங்களுக்கும் கூடுதலான வரலாற்றைக் கொண்டது. பல்வேறு கல்விமான்களையும், விளையாட்டு வீரர்களையும் உருவாக்கியுள்ளது. நாவல் நகர் என்று அழைக்கப்படும் நாவலப்பிட்டி நகரம், இலங்கையின் மத்திய மாவட்டமான கண்டி மாவட்டத்தில் மலைகள் சூழ்ந்த சூழலில் அமைந்திருக்கிறது.

கதிரேசன் கல்லூரி 1924 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 30 ஆம் திகதி கதிரேசன் ஆரம்பிக்கப்பட்டது . பாடசாலையை நிறுவ உதவியவர்கள்

கரு.மு.சி.ஞானசம்பந்தன், சி.ந.சி இராமன் செட்டியார், ந.சி.சி. முத்தையா செட்டியார், எம்.சந்தானம், சி.கனகசபை, டி.ஏ.டி.பெரியசாமிப்பிள்ளை, சி.ந.சி.லெட்சுமணன் செட்டியார், பெ.கோவிந்தசாமிப்பிள்ளை, வீ.எம்.பெரிய கருப்பன், ஜே.எம்.பொன்னையா, டி.சிவகுருநாதர்,சி.வேலாயுதம் சேர்.சம்பந்தன், சே.சோமசுந்தரம், ஜே.எம்.பொன்னையா 

அதிபர் பதவியை ஏற்றிருந்த பெருந்தகைகள் 1. திரு.க.சம்பந்தர் - முகாமையாளர் 1924-1929 திரு ஆழ்வாப்பிள்ளை ( அதிபர் ) 2. திரு. க.சுப்பிரமணியம் - முகாமையாளர் 1929-1939 3. திரு.ஜே.ஜி.ராஜகுலேந்திரன் (B.A. Stare Council Member) - அதிபர் 1939-1948 4. திரு.வி.இராமநாதன் (B.A.) - அதிபர் 1948-1951 5. திரு.க.சபாஆனந்தன் (B.A.Lirt) - அதிபர் 1951-1963 6. திரு S.ஆனந்தகுமாரசுவாமி (B.A.Dip–in—Ed) அதிபர் 1964-1970 7. திரு அ.இராஜகோபால் (B.A.Dip–in—Ed) அதிபர் 1970-1972 8. திரு S.இராஜா - அதிபர் 1972-1973, 9. திரு S.V.ஆறுமுகம் (B.A.Hons> M.A) அதிபர் 1973-1974 10. திரு T.V.மாரிமுத்து (M.A.) அதிபர் 1974-1975 11. திரு S.இராஜு அதிபர் (Eing trained) 1975 -1984 12. திரு S.V.ஆறுமுகம் (B.A.Hons> M.A) அதிபர் 1975-1984 13. திரு S.M.A.மூர்த்தி (B.A) அதிபர் 1984-1985 14. திரு.எஸ்.செல்வக்குமார் (B.A.Dip–in—Ed) அதிபர் 1985-1990 15. திரு.T.பெரியசாமி B.A. 1990-1991 16. திரு.P.பெரியசாமி (B.A.Dip–in—Ed) 1991-1994 17. திரு மு.கணபதிபிள்ளை (B.A.Dip–in—Ed) 1994-1996 18.திரு S.K.எழில்வேந்தன் (B.A.Hons) 1997 19. திருமதி லோகநாதன் 2005-2006 20. திரு ராஜேந்திரன் 2007-2016 21.திரு. நாகராஜ் 2016 - கதிரேசன் கனிஷ்ட வித்தியாலயம் 1)திரு.நா.முத்தையா 1963 2. திரு.நா.நடேசன் 1976 3). திரு.S.நடேசன் 1981 4).திரு. க.சுப்பிரமணியம் 1986 5) திருமதி சே.சுகுமாரி 2002

மேற்கோள்கள்

  1. "kandy District Secretariat - Other service center". பார்த்த நாள் 26 September 2016.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.