கதவு சந்தானம்
கதவு சந்தானம் என்றழைக்கப்படும் கே. ஆர். சந்தானகிருஷ்ணன் (K. R. Santhanakrishnan) ஒரு ஓவியர். கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இளங்கலை பயின்ற இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (மாஸ்டர் ஆஃப் பைன் ஆர்ட்ஸ்) பெற்றார். கதவு சந்தானம் என்ற பெயருக்கான காரணம் கதவுகள் குறித்து அவர் ஓவியம் வரைவது தான்.[1][2]
ஓவியர் சந்தானம் தன்னுடைய வாழ்க்கையில் வைத்திருக்கும் இலட்சியமே கதவுகளைக் குறித்த ஓவியங்களை மட்டும் வரைவது என்பது தான். இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், ஸ்பெயின், பார்சிலோனா போன்ற வெளிநாடுகளிலும் கண்காட்சிகள் நடத்தியிருக்கும் சந்தானம் சில விருதுகளையும் பெற்றிருக்கிறார். [3] 2000ஆம் ஆண்டில் தமிழ் நாடு ஓவிய நுண்கலைக் குழு மற்றும் லலித் கலா அகாடமியின் மாநில விருதை பெற்றிருக்கிறார்.
ஓவியம்
இவரது ஓவியங்கள் தமிழின மரபையும் அதில் ஒளிந்துள்ள அர்த்தங்களையும் எடுத்துரைக்கும், இந்த ஓவியம்.