கண் பரிசோதனை
கண் பரிசோதனை என்பது ஒரு கண் மருத்துவரால் வரிசையாக மேற்கொள்ளப்படும் பரிசோதனை ஆகும். பார்வைக் குறைபாடுகள் காரணமாக எத்தகையவர்களுக்குச் சிறப்பான உதவிகள் தேவைப்படுகின்றன என்பதை முடிவு செய்வதற்காகப் பல நாடுகளில் அரசாங்க நீதியமைப்புக்கள் சட்டக் குருட்டுத்தன்மைக்கான விரிவான வரைவிலக்கணங்களை உருவாக்கியுள்ளன. வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவின் பெரும்பகுதியிலும் குருட்டுத்தன்மை என்பது, மிகவும் அதிகமாக இயலக்கூடிய திருத்தங்களுடன் கூடிய கண்ணின் பார்வைக் கூர்மையின் அளவு 20/200 (6/60) அல்லது அதிலும் குறைவாக இருத்தல் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது. சாதாரணமான பார்வையுடைய ஒருவர் 200 அடி (60 மீட்டர்) தொலைவில் இருந்து பார்க்கக்கூடிய பொருளொன்றைச் சட்டக் குருட்டுத்தன்மை கொண்ட ஒருவர் 20 அடி (6 மீட்டர்) தொலைவில் இருந்தே அதேயளவு தெளிவாகப் பார்க்கமுடியும் என்பதே இதன் பொருளாகும். சில பகுதிகளில், சராசரிப் பார்வைக் கூர்மை உள்ள ஒருவருடைய பார்வைப் புலம் (visual field) 20 பாகைக்குக் (இருக்கவேண்டிய அளவு 180 பாகை) குறைவாக இருந்தாலும் அவர் சட்டக் குருட்டுத்தன்மை கொண்டவராகக் கருதப்படுகிறார்.
பொருள்களிலிருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள் சரியாக விழித்திரையின் மேல் குவிக்கப்படாமல் தோன்றும் திருத்தப்படாத ஒளிச்சிதறல் பிழைகளால் உலகளவில் 43% பார்வைக் குறைபாடு தோன்றுகிறது. கண்புரை நோயால் 33% பார்வை இழப்பும், குளுக்கோமா எனப்படும் கண் அழுத்த நோயால் 2% பார்வை இழப்பும் ஏற்படுகின்றன.. பார்வைத்திறனை அளக்கப் பயன்படும் சினெல்லன் அட்டவணை 80% பார்வை குறைபாடு நோய்கள் முறையான சிகிச்சையால் தடுக்கக்கூடியவை அல்லது தீர்க்கப்படக்கூடியவை என்று உலக சுகாதார நிறுவனம் மதிப்பிடுகிறது.