கணேச ஜெயந்தி
கணேச ஜெயந்தி அல்லது மகா சுக்கில சதுர்த்தி (Ganesh Jayanti) என்பது இந்துக் கடவுளான விநாயகரின் பிறந்தநாளைக் குறிக்கும் தினமாகும்.[1][2][3] இது தில்குந்த சதுர்த்தி என்றும் வரத சதுர்த்தி எனவும் அழைக்கப்படுகின்றது. கணேச ஜெயநதி விரதாமாகவும் பண்டிகையாகவும் அனுட்டிக்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடத்திலும் மாசி மாதத்தில் வரும் சுக்கில பட்ச சத்துர்த்தியில் கணேச ஜெயந்தி அனுட்டிக்கப்படுகின்றது. இது இந்திய மாநிலங்களான மகாராட்டிரா மற்றும் கோவாவிலும் பெரும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகின்றது. பொதுவாக அனைவராலும் அறியப்பட்ட விநாயக சதுர்த்தி விநாயகரின் பிறந்த நாளாகவே கொண்டாடப்படுகிறது. கணேச ஜெயந்தி மாசி மாதத்திலும் கொண்டாடப்படுவது விநாயக சதுர்த்தி ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுவதுமே இவ்விரண்டு விழாக்களுக்குமான வேறுபாடாகும்.
கணேச ஜெயந்தி | |
---|---|
![]() விநாயர் | |
பிற பெயர்(கள்) | மகா சுக்கில சதுர்த்தி,தில்குந்த சதுர்த்தி,வரத சதுர்த்தி |
கடைபிடிப்போர் | இந்துக்கள் |
வகை | இந்து |
நாள் | வாருடாந்தம் மாசி மாததில் வரும் சுக்கில பட்ச சதுர்த்தி |
நிகழ்வு | வருடாந்தம் |
தொடர்புடையன | விநாயகரின் பிறந்தநாள் |
மேற்கோள்கள்
- Thapan, Anita Raina (1997), Understanding Gaņapati: Insights into the Dynamics of a Cult, New Delhi: Manohar Publishers, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7304-195-4 p.215
- Wright, Daniel (1993). History of Nepal. Asian Educational Services. பக். 41. ISBN 9788120605527. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-206-0552-7. http://books.google.co.in/books?id=AiU50pM_z6MC&pg=PA41&dq=magh+ganesh&lr=&as_brr=3#v=onepage&q=magh%20ganesh&f=false. பார்த்த நாள்: 2009-11-26.
- Sharma, Usha. Festivals in Indian Society (2 Vols. Set). Mittal Publications. பக். 70–71. http://books.google.co.in/books?id=Z6OYRUEAF7oC&pg=PA71&dq=magh+ganesa&lr=&as_brr=3#v=onepage&q=&f=false. பார்த்த நாள்: 2009-11-26.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.