கணினி நிரலாக்க மொழி
கணினி நிரலாக்க மொழி , கணினியின் செயற்பாட்டினை ஒரு நிரல் குறிமுறை (code) மூலம் அதனை என்ன செய்யவேண்டும் என்று கட்டளைகளை கொடுக்கலாம். கணினியின் நிரல் ஏற்பு மொழி என்பது பலவகைபடும். அதன் மொழி கணினியின் தன்மையை பொருத்தும் மற்றும் அது செய்ய வேண்டிய வேலையை பொருத்து மாறுபடும். இதனை கணினி மொழி என்றும் குறிப்பிடுவர்கள். கணினி மொழி , நிரல் மொழியின் ஒரு பகுதியாகும்.
பொறி மொழி
மனிதர்கள் பேசும் மொழி ( ஆங்கிலம் ) மூலம் எழுதப்பட்ட நிரல் மொழி கிட்டதட்ட 1940ல் உபயோகிகபட்டது. பொறி மொழி [1] ( aseembly langauge ) என்ற ஒரு மொழி கணினி பொறியாளர்கள் உபயோகித்தார்கள். அம்மொழி சிறு சிறு கட்டளைகளை மேற்கொண்டு அமைந்தது.
உதாரணம்: இரு எண்களை கூட்டும் பொறி மொழி
mov ax,3 mov bx,2 add ax,bx
மேற்கோள்
- வளர்மதி மன்றம், அண்ணா பல்கலைகழகம் (டிசம்பர் 1998), கணிபொறி கலைச்சொல் அகராதி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.