கணினி கட்டுமானம்
கணினிச் செயலகக் கூறுகள் (மையச் செயலகம், நினைவகம், கடிகாரம், பாட்டை), புறக்கருவிகள் (காட்சித் திரை, விசைப் பலகை, சுட்டி, இயக்க அமைப்புகள்), மென்பொருள்கள் ஆகியவற்றின் கட்டமைப்பும் அவற்றின் இணைந்த செயல்பாட்டையும் ஆயும் துறை கணினிக் கட்டமைப்பு (Computer Architecture) ஆகும். கணினிக் கட்டமைப்பு கணிமை நோக்கிய அடிப்படை கோட்பாடுகளை அல்லது கருத்துப் படிமங்களை ஆய்ந்து, விவரித்து அதற்கு ஏற்ற வன்பொருள், மென்பொருள் கட்டுமானங்களைத் தேர்வு செய்ய உதவுகின்றது.
கணினிக் கட்டமைப்புப் படம்
கணினிக் கட்டமைப்பு
நுட்பவியல் சொற்கள்
- கட்டுப்பாட்டகம் - Control Unit
- எண்ணியல் ஏரணவகம் - Arithmetic Logic Unit
- நினைவகம் - Memory
- உள்ளீடு - Input
- வெளியீடு - Output
- மையச் செயலகம் - Central Processing Unit
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.