கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்

தேவநேயப் பாவாணரால் எழுதப்பட்டு 1936 ல் வெளிவந்த 84 பக்கங்கள் கொண்ட நூலே கட்டுறைக் கசடறை என்னும் வியாச விளக்கம் ஆகும். இலக்கணமானது பொதுவில் மாணவர்க்கு வெறுப்பை விளைவிப்பதாக இருக்கிறமையால், "வியாசத்திற்கு வேண்டிய இலக்கணங்களை மட்டும் இயன்றவரை சுருக்கமாகவும் விளக்கமாகவும் கற்பிப்பின் மாணவர்க்குப் பயன்படுமென்றெண்ணி," இந்நூலை செய்ததாக பாவாணர் முகவுரையில் கூறுகின்றார். இந்நூலானது எழுத்தியல், சொல்லியல், சொற்றொடரியல், அணியியல், வியாசவியல் எனும் ஐந்து பெரும்பிரிவுகளாய் பிரிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலச் சொன்மொழிபெயர்ப்பு எனும் பகுதியும் வருகின்றது.

எழுத்தியல்

எழுத்தியல் என்பதன் கீழ் பின்வருவன காணப்படுகின்றன: சில எழுத்துகளின் வடிவங்கள், சில இனவெழுத்துகளின் பெயர்கள், ரகர றகர பேதம், ழகர ளகர பேதம், மொழிமுதலெழுத்துகள், மொழியிடை யெழுத்துகள், மொழியிறுதி யெழுத்துகள், வடவெழுத்து, புணர்ச்சி, வலிமிகும்இடங்கள், வலிமிகா இடங்கள்.

சொல்லியல்

இப்பகுதி எண்ணடி உயர்திணைப் பெயர்கள், இருபாற் பெயர்கள், இழிவடைந்த சொற்கள், உயர்வடைந்த சொற்கள், இகழ்ச்சிச் சொற்கள், இழிசொற்கள், வழூஉச் சொற்கள், மரூஉச் சொற்கள், குறைச்சொற்கள், போலி(எழுத்துப்போலி, இலக்கணப்போலி, போலித்திரிபு), பல்வடிவச் சொற்கள், சொன்மயக்கம், சொற்குறுக்கம் ஆகியனவற்றைக் கொண்டு விளங்குகின்றது.

சொற்றொடரியல்

சொற்றொடரியல் ஆகியது வாக்கிய அமைப்பு என்பதன் கீழ் சொன்முறை, முறைமாற்று, சொல்லிடையீடு, முன்மைநிலை(proximity), அண்மைநிலை(priority), தெளிவு, பொருள்வலி, திட்டம், பொருத்தம், இனிமை, சுருக்கம், தூய்மை, இசைவு, வாக்கிய முடிபு, வாக்கிய அளவு, வாக்கியவொருமை, ஒருபோகமைப்பு என்பனவற்றையும்; பாகியமைப்பு; உம்மைத்தொடர்; வினா மரபு; நடை; வழக்கியல் என்பதன் கீழ் தகுதி வழக்கு,திசை வழக்கு, இழிவழக்கு, அயல் வழக்கு என்பனவற்றையும்; நிறுத்தக்குறிகள்; தற்கூற்று,அயற்கூற்று; மரபு; இணைமொழிகள்; தொடர்மொழிகள் என்பனவாகிய மற்றும் பிறவையும் கொண்டு விளங்குகின்றது.

அணியியல்

அணியியல் ஆனது சொல்லணி, பொருளணி எனப் பிரிக்கப்பட்டு, சொல்லணியின் கீழ் மோனை, எதுகை, மடக்கு என்பனவற்றையும், பொருளணியின் கீழ் தன்மை, உவமை, உருவகம், வேற்றுமை, முரண், உயர்வு நவிற்சி, பலபடப்புனைவு, வஞ்சப் புகழ்ச்சி, தற்குறிப்பேற்றம், சுவை, வேற்றுப்பொருள் வைப்பு, நிகழ்ச்சி, ஆட்படையணி, ஏற்றவணி(Climax), இறக்கவணி(Anti - climax), ஒலியணி என்பனவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

வியாசவியல்

வியாசவியல் ஆனது கடிதமெழுதல், வியாச விதிகள், மாதிரி வியாசம், வியாச வகை, வியாசப் பொருள்கள் எனும் பகுதிகளைக் கொண்டுள்ளது.

ஆங்கிலச் சொல் மொழிபெயர்ப்பு

பல ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் மொழி பெயர்ப்பை இப்பகுதியில் காணலாம்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.