கடுவெளிச் சித்தர்

”கடுவெளி” என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை.[1]

இவர் காஞ்சியில் சமாதியடைந்ததாக கூறுகின்றனர். இவரை பற்றிய வரலாற்றை யாரும் முறையாக அறியவில்லை.

நூல்கள்

கடுவெளிச் சித்தர் இயற்றிய நூல்கள்
  • கடுவெளிச் சித்தர் பாடல்
  • ஆனந்தக் களிப்பு
  • வாத வைத்தியம்
  • பஞ்ச சாத்திரம்

குறிப்புதவி

மேற்கோள்

  1. "நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
    நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
    கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
    கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
    "நல்ல வழிதனை நாடு- எந்த
    நாளும் பரமனை நத்தியே தேடு
    வல்லவர் கூட்டத்திற் கூடு - அந்த
    வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு"- 'கடுவெளிச் சித்தர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.