கடுங்கோன் (சங்ககாலம்)

கடுங்கோன் என்பவன் சடைச்சங்கத்தின் இறுதியில் வாழ்ந்த அரசனாக கருதப்படும் பாண்டிய மன்னனாவான்.

நீங்கள் களப்பிரர்களை வென்ற கடுங்கோன் 6-7ஆம் நூற்றாண்டு என்ற பாண்டிய மன்னனை பார்க்க வந்திருந்தால் அக்கடுரைக்கு செல்லவும்.

அகப்பொருள்

இறையனார் அகப்பொருளுரையில் குமரிக் கண்டத்திலிருந்த தென்மதுரையில் முதற் சங்கம் நடைபெற்று வந்தது. சிவபெருமான், அகத்தியனார், முருகக் கடவுள், முரஞ்சியூர் முடி நாகனார், குபேரன் முதலாய 549 புலவர் அதன்கண் அமர்ந்து தமிழ் வளர்த்தனர். அச்சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த புலவர்களின் எண்ணிக்கை 4449. அவர்கள் பரிபாடல்கள் பலவற்றையும், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை என்ற நூல்களையும் இயற்றினார்கள். இந்தத் தலைச் சங்கம் தொடர்ந்து 4440 ஆண்டுகள் நடைபெற்றது. காய்சின வழுதி முதலாகக் 'கடுங்கோன் ஈறாகப் பாண்டிய மன்னர் 89 பேர் இச்சங்கத்தைப் பாதுகாத்து வந்தார்கள். அக்காலத்தில் எழுந்த நூல்களுக்கு இலக்கணமாக இருந்த நூல் அகத்தியம் எனப்து போல் கூறப்பட்டுளது. அவ்வகப்பொருளில் கூறியிருப்பது உண்மையாக இருப்பின் இக்கடுங்கோனின் காலம் குறைந்த பட்சம் பொ.மு. 5500 வரை செல்லும்.

சின்னமனூர் செப்பேடுகள்

சின்னமனூர் செப்பேடுகளில் சடைச்சங்கத்தை முடித்து வைத்த இக்க்டுங்கோனை முதல் அரசனாக கொண்டு பொ.பி. 10ஆம் நூற்றாண்டு பாண்டிய மன்னனான ராசசிம்மன் வரை பாண்டிய வம்ச வர்ணனை கூறப்பட்டுளது.[1] இதை வைத்து அகப்பொருள் காலம் முதல் சின்னமனூர் செப்பேடு பொறித்த காலம் வரை சடைச்சங்கத்தை முடித்துவைத்தவன் கடுங்கோன் என்றே பாண்டியர்கள் கருதிவந்ததை அறியலாம்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.