கடம்பர் உலா

கடம்பர் உலா அல்லது கடம்பர் கோயில் உலா என்பது குளித்தலை கடம்பவனேசுவரர் கோயில் இறைவன் கடம்பவனநாதரை நாயகனாக கொண்டு எழுதப்பட்ட உலாவாகும். [1] இந்நூலை உ.வே.சாமிநாத ஐயர் கிபி 1932 -ல் கடம்பர் கோயில் உலா என்ற பெயரில் பதிப்பித்துள்ளார். [2]

பேதை,பெதும்பை,மங்கை,மடந்தை,அரிவை,தெரிவை,பேரிளம்பெண் என இறைவனை ஏழு பெண் பருவங்களாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலை எழுதியவர் பெயர் அறியப்படவில்லை. எனினும் இந்நூலில் உள்ள "திருவா வடுதுறையி, லெம்பிரா னன்ப ரிதயமோ" எனும் குறிப்பால் திருவாவடுதுறை ஆதினத்தினைச் சார்ந்தவர் என்று அறிகிறோம்.

இவற்றையும் காண்க

ஆதாரங்கள்

  1. சைவம் ஆர்க் கடம்பர் உலா
  2. தினமணி உ.வே.சா. பதிப்புகள் நாள் சூலை 20, 2014

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.