கஞ்சஞ்சங்கா மலை

கஞ்சன்சங்கா (Kangchenjunga, நேப்பாளம்: कञ्चनजङ्घा Kanchanjaŋghā), உலகிலேயே உயரத்தில் மூன்றாவதாக இருக்கும் மலை ஆகும். இம்மலை இமயமலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 8,586 மீ.

கஞ்சஞ்சங்கா மலை

Kanchenjunga
காலையில் கஞ்சஞ்சங்கா மலை
இந்தியாவில் உள்ள தார்ச்சீலிங்கு புலிமலையில் இருந்து தெரியும் காட்சி.
உயர்ந்த இடம்
உயரம்8,586 m (28,169 ft)[1]
3-ஆவது உயரமான மலை
இடவியல் முக்கியத்துவம்3,922 m (12,867 ft)[2]
29-ஆவது
பட்டியல்கள்
புவியியல்
கஞ்சஞ்சங்கா மலை

Kanchenjunga
நேபாள - இந்தியா எல்லையில்
அமைவிடம்நேபாளம்-இந்தியா எல்லை[2]
மலைத்தொடர்இமயமலை
Climbing
First ascent25 மே 1955
ஏறியவர் சோ பிரௌன்-உம் சியார்ச்சு பாண்டு
(குளிர்கால முதல் மலையேற்றம்- சனவரி 11, 1986, செர்சி குக்குசுக்காவும் கிறிசிச்சாஃபு வீலிக்கி)
Easiest routeபனியாறு/தூவிப்பனி//உறைபனியேற்றம்
கஞ்சஞ்சங்கா மலை

இது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தில் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும்.[3]

கஞ்சன் ஜங்கா என்பது பனியின் ஐந்து புதையல்கள் என்று தோராயமாகப் பொருள் தரும். கஞ்சன் ஜங்காவில் மொத்தம் ஐந்து சிகரங்கள் (கொடுமுடிகள்) உள்ளன. அவற்றில் நான்கு 8,450 மீட்டர் உயரத்திற்கு அதிகமானவை.

1852-ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான் சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "High Asia II – Himalaya of Nepal, Bhutan, Sikkim and adjoining region of Tibet". Peaklist.org (2000–2005).
  2. Kanchenjunga
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.