கஞ்சஞ்சங்கா மலை
கஞ்சன்சங்கா (Kangchenjunga, நேப்பாளம்: कञ्चनजङ्घा Kanchanjaŋghā), உலகிலேயே உயரத்தில் மூன்றாவதாக இருக்கும் மலை ஆகும். இம்மலை இமயமலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 8,586 மீ.
கஞ்சஞ்சங்கா மலை Kanchenjunga | |
---|---|
காலையில் கஞ்சஞ்சங்கா மலை இந்தியாவில் உள்ள தார்ச்சீலிங்கு புலிமலையில் இருந்து தெரியும் காட்சி. | |
உயர்ந்த இடம் | |
உயரம் | 8,586 m (28,169 ft) [1] 3-ஆவது உயரமான மலை |
இடவியல் முக்கியத்துவம் | 3,922 m (12,867 ft) [2] 29-ஆவது |
பட்டியல்கள் |
|
புவியியல் | |
![]() ![]() கஞ்சஞ்சங்கா மலை Kanchenjunga நேபாள - இந்தியா எல்லையில் | |
அமைவிடம் | நேபாளம்-இந்தியா எல்லை[2] |
மலைத்தொடர் | இமயமலை |
Climbing | |
First ascent | 25 மே 1955 ஏறியவர் சோ பிரௌன்-உம் சியார்ச்சு பாண்டு (குளிர்கால முதல் மலையேற்றம்- சனவரி 11, 1986, செர்சி குக்குசுக்காவும் கிறிசிச்சாஃபு வீலிக்கி) |
Easiest route | பனியாறு/தூவிப்பனி//உறைபனியேற்றம் |
கஞ்சஞ்சங்கா மலை |
---|
இது இந்தியாவிற்கும் நேபாளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது. இது நேபாளத்தில் இரண்டாவது உயரமான மலையும் இந்தியாவின் மிக உயரமான மலையும் ஆகும்.[3]
கஞ்சன் ஜங்கா என்பது பனியின் ஐந்து புதையல்கள் என்று தோராயமாகப் பொருள் தரும். கஞ்சன் ஜங்காவில் மொத்தம் ஐந்து சிகரங்கள் (கொடுமுடிகள்) உள்ளன. அவற்றில் நான்கு 8,450 மீட்டர் உயரத்திற்கு அதிகமானவை.
1852-ஆம் ஆண்டு வரை இதுவே உலகின் மிக உயரமான் சிகரமாக கருதப்பட்டு வந்தது. பின்னர் நடந்த கணக்கெடுப்புகளில் எவரெஸ்ட் சிகரமே உயர்ந்தது என்றும் இது மூன்றாவது உயரமானது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேற்கோள்கள்
- "High Asia II – Himalaya of Nepal, Bhutan, Sikkim and adjoining region of Tibet". Peaklist.org (2000–2005).
- Kanchenjunga
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.