கஜானன் சந்திரகாந்து
கஜானன் சந்திரகாந்து கீர்த்திகார், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1943-ஆம் ஆண்டின் செப்டம்பர் மூன்றாம் நாளில் பிறந்தார். இவர் மும்பையின் கோரேகாவ் பகுதியில் வசிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, வடமேற்கு மும்பை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]
பதவிகள்
கீழ்க்காணும் பொறுப்புகளை ஏற்றுள்ளார்.[1]
- 1990 - 2004: மகாராட்டிர சட்டமன்றத்தின் உறுப்பினர் (நான்கு முறை)
- 1995 - 1998: மகாராட்டிர அரசின் அமைச்சர் (உள்துறை, சுற்றுலாத் துறை)
- 1998 - 1999: மகாராட்டிர அரசின் அமைச்சர் (தகவல் துறை, மக்கள் தொடர்புத் துறை, போக்குவரத்துத் துறை)
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.