கங்கைச் சமவெளி

தென்மேற்குப் பருவக் காற்றால் இப்பகுதி அதிக மழை பெறுகிறது. இங்கு குளிர்காலத்தில் குறைந்த வெப்பநிலை நிலவுகிறது.. இதன் வடமேற்குப் பகுதியில் மேற்கு கிழக்கு பஞ்சாப், மேற்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலுள்ள தாவரங்கள் படிப்படியாக மாறி மேற்குப் பகுதியிலுள்ள பாலைவனத்துடன் ஒன்றி விடுகின்றன. இந்தப் பாலைப் பகுதியிலிருந்து கிழக்கு நோக்கிச் சென்று ஈரப்பதமிக்க சமவெளியை அடையும்போது அங்கு பாலை விலங்குகள் காணப்படுவதில்லை. கங்கைச் சமவெளியின் வறண்ட பகுதிகளில் இரலை மான்களும் நவ்விகளும் முன்பு சிறு கூட்டங்களாக வாழ்ந்தன. கிழக்கு, மேற்கு வங்கப் பகுதியில் மா, அத்தி, அரசு,ஆல்,பனை,தென்னை போன்ற மரங்களுள்ள அடர்ங்த தோப்புகள் உள்ளன. இங்குள்ள வனவிலங்குகள் முந்நீரக இந்தியாவின் ஈரமுள்ள காடுகளிலும் விளைநிலங்களிலும் காணப்படும் விலங்கினங்களைப் போல உள்ளன. கங்கையின் கழிமுகத்தில்பரந்த சதுப்பு நிலமும் சுந்தரவனக் காடுகளும் உள்ளன. பல சிறிய தீவுகள் உள்ளன. இக்காடுகளில் முந்நீரக இந்தியாவில் காணப்படும் பெரிய விலங்குகளும் சதுப்பு நில மான்களும் காணப்படுகின்றன.

[[ பகுப்பு: திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள் ]][1]

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி 5
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.