ஓபெர்கஃபெல் எதிர் ஒட்செசு

ஓபெர்கஃபெல் எதிர் ஒட்செசு (Obergefell v. Hodges), 576 ஐ.அ. ___ (2015) என்பது ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் நடந்த ஒரு முக்கிய வழக்கு ஆகும். இந்த வழக்கில் ஒரு பாலினத்தவர்கள் திருமணம் செய்வதற்கான உரிமையை ஐக்கிய அமெரிக்காவின் அரசமைப்புச் சட்டத்தின் பதினான்காவது திருத்தத்தின் கீழ் ஏற்றுக்கொண்டது. இந்த வழக்கின் தீர்ப்பின் படி ஐக்கிய அமெரிக்காவின் மாகாணங்கள் ஒரு பால் திருமணங்களை மறுக்க முடியாது. பிற மாகாணத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பால் திருமணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.[1].

மேற்கோள்கள்

  1. "U.S. Supreme Court legalizes same-sex marriage in all 50 states". CBC.ca. பார்த்த நாள் 27 சூன் 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.