ஒளியியற் கண்மாயம்
பொருளின் உண்மைத் தோற்றத்திலிருந்து காட்சிப் புலனுணர்வு மூலம் பெற்ற படிமம் வேறுபடுதல் ஒளியியற் கண்மாயம் (Optical Illusion) எனப்படும்.
உடலியல் ஒளியியற் கண்மாயம்

அதிக ஒளியைப் பார்த்த பின் தோன்றும் பின்தோற்றங்களை உடலியல் ஒளியியற் கண்மாயத்துக்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம்.[1] படிமமொன்றின் ஒளிர்வு, நிறம், அமைவு, அளவு, நகர்வு முதலியவை உடலியல் ஒளியியற் கண்மாயத்தை ஏற்படுத்துவதற்குப் பங்களிக்கின்றன.
எர்மன் நெய்யரி மாய உணர்ச்சியில் வெள்ளைப் புள்ளிகள் கறுப்புப் புள்ளிகளாகத் தோன்றுவதும் உடலியல் ஒளியியற் கண்மாயமே ஆகும்.[2]
கலைஞர்கள்
எம். சி. எசுசர், பிரிட்செட்டு இரிலே, சால்வடார் இடாலி, கிசெப்பி அர்சிம்போல்டோ, மார்செல் துச்சாம்பு, விக்டர் வசரேலி, சார்லசு ஆலன் கில்பர்டு முதலியோர் ஒளியியற் கண்மாயங்களை உருவாக்கிய கலைஞர்கள் ஆவர்.
காட்சியகம்
எப்பின்காசு மாய உணர்ச்சி
சிற்றுண்டிச்சாலைச் சுவர் மாய உணர்ச்சி
பேக்கு-மேன் மாய உணர்ச்சி
நகர்வு மாய உணர்ச்சி