ஒளிப் பாயம்

ஒளிப்பாயம் அல்லது தன்னொளிர்வு (luminescence) என்பது ஒரு ஒளிமூலத்தினால் வெளிவிடப்பட்டுக் கண்களால் பார்க்கப்படுகின்ற ஒளிச் சக்தியின் அளவைக் குறிக்கும். இன்னொரு வகையில் இதனைப் பார்வைத் தாக்கத்தின் அடிப்படையில் அளவீடு செய்யப்படும், ஒளிமூலமொன்றால் வெளியேற்றப்படுகின்ற, ஒளிச்சக்தியின் அளவு என்று கூறலாம். இதன் அலகு லுமென் ஆகும்.

ஒரு பொருள் வெப்பத்தினாலல்லாத ஒளி உமிழும் தன்மையைத் தன்னொளிர்வு எனலாம். எனவே, இதனை குளிர் நிலை கதிர்வீச்சென்றும் கூறலாம். வேதிவினைகள், மின்னாற்றல், அணுவக அசைவுகள் அல்லது படிகத்தின் மீதான அழுத்தங்கள் ஆகியவற்றால் தன்னொளிர்வு ஏற்படுகிறது. இதனால், வெப்பத்தினால் ஒளி உமிழும் வெள்ளொளிர்வு (incandescence) நிகழ்விலிருந்து ஒளிப்பாயம் வேறுபடுகிறது. முதலில் கதிரியக்கம், கதிரியக்கத் தன்னொளிர்வாகக் கருதப்பட்டதென்றாலும், மின்காந்தக் கதிர்வீச்சைத் தவிர மற்ற நிகழ்வுகளும் கதிரியக்கத்தில் நடைபெறுவதால், தற்பொழுது கதிரியக்கம் தன்னொளிர்விலிருந்து வேறாகப் பிரித்தறியப்படுகிறது. தன்னொளிர்வு என்னும் சொல் செருமானிய இயற்பியலாளரான எயிலார்ட் வீடெமான் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது[1],[2].

மேற்கோள்கள்

  1. E. Wiedemann (1888) "Über Fluorescenz und Phosphorescenz, I. Abhandlung" (On fluorescence and phosphorescence, first paper), Annalen der Physik, 34: 446-463.
  2. A Brief History of Fluorescence and Phosphorescence before the Emergence of Quantum Theory Bernard Valeur and Mario N. Berberan-Santos J. Chem. Educ., 2011, 88 (6), pp 731–738 எஆசு:10.1021/ed100182h
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.