ஒற்றார்

ஒற்றார் (Otrar) அல்லது உற்றார் (Utrar) (கசாக்: Отырар, ஒத்தீறார்); அல்லது பராப் (Farab) என்பது ஒரு நடு ஆசிய பேய்ப் பட்டணம் ஆகும். இது ஒரு காலத்தில் நகரமாக இருந்தது. இது கசகஸ்தான் நாட்டின் வழியாகச் செல்லும் பட்டுப்பாதையில் அமைந்திருந்தது. நடு ஆசியாவின் வரலாற்றில் ஒற்றார் ஒரு முக்கியமான நகரம் ஆகும். நிலையான மற்றும் வேளாண்மை நாகரிகங்களின் எல்லையில் இது அமைந்திருந்தது. ஒரு பாலைவனச் சோலையின் மையமாக அமைந்திருந்தது. இது ஒரு அரசியல் மாவட்டமும் ஆகும். சீனா, ஐரோப்பா, அண்மைக் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு, சைபீரியா மற்றும் உரல் பகுதிகளை கசகஸ்தானுடன் இணைக்கும் முக்கியப் புள்ளியாக இது விளங்கியது.

ஒற்றார்
Отырар
Отрар
ஒற்றார்
கசகஸ்தானில் ஒற்றாரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 42°51′09″N 68°18′10″E
நாடுகசகஸ்தான்
மாகாணம்தெற்கு கசகஸ்தான் மாகாணம்
நிறுவப்பட்டதுbefore 8ம் நூற்றாண்டு
ஏற்றம்506
நேர வலயம்அல்மாடி நேரம் (ஒசநே+06:00)
அஞ்சல் எண்160000

உசாத்துணை

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.