ஒருசிறைப் பெரியனார்

குறுந்தொகை 272, நற்றிணை 121, புறநானூறு 137[1] ஆகிய 3 பாடல்கள் இவரால் பாடப்பட்டனவாகச் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன.

ஒருசிறைப் பெரியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர்.

பாடல் தரும் செய்திகள்

புறம் 137

நாஞ்சில் என்பது நாஞ்சில்(கலப்பை) போல் தோற்றம் தரும் ஒரு மலை. அதனைச் சூழ்ந்த நாடு நாஞ்சில்நாடு. அதன் தலைநகரம் நாஞ்சில். இது குமரி மாவட்டத்தில் வீரநாராயண மங்கலம் என்னும் பெயர் கொண்டுள்ளது.

நாஞ்சில் வள்ளுவன் இவ்வூரிலு இருந்த சங்ககாலக் கொடைவள்ளல். இவனைக் கண்டு புலவர் பாடுகிறார். மூவேந்தர் கொடையைப்பற்றி எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் உன் கொடை ஒன்றுதான். குளநீர் பாயும் வயலில் போட்ட விதை சாவதில்லை. அதுபோல உன்னிடம் வந்தவர் வறிது மீள்வதில்லை - என்கிறார்.

குறுந்தொகை 272

கலைமானின்மேல் பாய்ந்த அம்புபோல் அவள் கண் என்மேல் பாய்ந்துவிட்டது. பாய்ந்த அம்பைக் கலைமான் தானே பிடுங்கிக்கொள்ள முடியாதது போல அவள் கண் குத்தியதை என்னால் பிடுங்கி எறிய முடியாது என்று தலைவன் தன் பாங்கனிடம் வினவுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது.

நற்றிணை 121

போருக்குச் சென்ற தலைவன் போர் முடிந்து இல்லம் திரும்புகிறான். அவனது தேரை ஓட்டிவரும் பாகன் தன் தலைவனிடம் சொல்கிறான். 'இதோ! கான்யாற்று மணலைத் தாண்டிவிட்டோம். பிணைமான் விதைத்து வளர்ந்த வரகை மேய்ந்துவிட்டுத் தன் கலைமானோடு சேர்ந்து உறங்கும் உன் ஊர் இதோ நெருங்கிவிட்டது' - என்கிறான்.

வெளி இணைப்புகள்

  1. ஒருசிறைப் பெரியனார் பாடல் புறநானூறு 137
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.