தொகுசுற்று

ஒரு தொகுப்புச் சுற்று அல்லது ஒருங்கிணை சுற்று அல்லது ஒற்றைக்கல் ஒருங்கிணப்புச் சுற்று(monolithic integrated circuit) என்பது மண்ணியம் போன்ற குறைக்கடத்திப் பொருளாலான ஒரு சிறிய தகடில் அமைக்கப்பட்ட பல செயல்திறனுள்ள மற்றும் செயல்திறனற்ற உறுப்புகளும் அவற்றின் இணைப்புச் சுற்றுகளும் சேர்ந்த கூட்டமைப்பு ஆகும். இது நுண் சில்லு(microchip அல்லது IC) என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றைச் சார்பிலி உறுப்புளால் அமைக்கப்படும் பிரிநிலைச் சுற்றுகளைக் காட்டிலும் சிறியதாகத் தயாரிக்கலாம்.

கிட்டத்தட்ட அனைத்து மின்னணுக் கருவிகளிலும் ஒருங்கிணைச் சுற்றுகள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன. இவை மின்னணுவியலில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கிவிட்டிருக்கின்றன. நவீன சமூகத்தின் அமைப்பில் பிரிக்கவியலாத உறுப்புளாகத் தற்போது விளங்கும் கணினிகள், செல்லிடத்துப் பேசிகள், மற்றும் பிற இலக்கமுறை வீட்டு உபகரணங்கள் போன்றவற்றைச் சாத்தியப்படுத்தியது தொகுப்புச் சுற்றுகளின் மிகக் குறைந்த உற்பத்திச் செலவே ஆகும்.

நற்பயன்கள்

  1. மீச்சிறு உருவமைப்பு
  2. குறைந்த அளவான திறனை மட்டுமே நுகருதல்
  3. நம்பகத்தன்மை
  4. மிகமிகச் சிறிய எடை
  5. மலிவான விலை
  6. எளிதில் மாற்றும் வசதி (replacement)

பிரிவுகள்

தொகுப்புச்சுற்றுகள் அவை செயல்படும் விதத்தைப் பொருத்து இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை:

  • இலக்கத் தொகுப்புச் சுற்று (Digital IC)
இவை இலக்க சைகைகளைச் செயல்படுத்தும் தொகுப்புச்சுற்றுகள்
  • நேர்போக்குத் தொகுப்புச் சுற்று (Linear IC)
இவை தொடர் மின் சைகைகளைச் செயல்படுத்தும் தொகுப்புச்சுற்றுகள்

இதைப்போலவே தொகுப்புச்சுற்றுகள் அவை தயாரிக்கப்படும் விதத்தைப் பொருத்தும் இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை:

  • ஒற்றைப்படிகத் தொகுப்புச் சுற்று (monolithic IC)
ஒற்றைப்படிகத் தொகுப்புச் சுற்றில் செயல்திறன் மிகுந்த கருவிகள், செயல்திறனற்ற உறுப்புகள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள உறுப்புகள் யாவும் ஒற்றைச் சிலிக்கன் படிவத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே மாதிரியான மின்னோட்டங்கள் அதிக அளவில் வரும்போது , இந்த ஒற்றைப்படிகத் தொகுப்புச் சுற்றுகள் பயன்படுகின்றன. இதனால் செலவு குறைவதுடன், நம்பகத்தன்மை மிக்கதாகவும் அமைகிறது.
  • இனக்கலப்புத் அடித்தளத்தில் சுற்று (Hybrid IC)
இனக்கலப்புத் ic பீங்கான் அடித்தளத்தில் தனித்தனியான உறுப்புகள் வைக்கப்பட்டு அவற்றிற்கிடையேயான இணைப்புகள் உலோக இணைப்புகளாகவோ அல்லது கம்பிகளாகவோ இணைக்கப்பட்டிருக்கும்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.