ஒரு நாடு இரு கொள்கைகள்

ஒரு நாடு இரு கொள்கைகள் (One country, two systems) என்பதன் மூலப்பொருள் சீன மக்கள் குடியரசு தமது சோசலிசக் கொள்கையைத் தொடர்ந்து பேணியப்பொழுதும், ஹொங்கொங், மக்காவ் மற்றும் தாய்வான் முதலாளித்துவக் கொள்கையைப் பேணமுடியும் என்பதாகும்.[1] இங்கே இந்நாடுகள் தமது தனித்துவமான கொள்கைகளைக் கொண்டிருந்தாலும் "ஒரு நாடு" எனும் கொள்கையை முதன்மைப்படுத்தியதாகும். அதாவது "ஒரே நாடு" என்பது "ஒரே சீனா" என்பதைக் குறிக்கும்.

"ஒரு நாடு இரு கொள்கைகள்" எனும் ஆட்சி முறைமை பற்றிய எண்ணக்கருவை மக்கள் சீனக் குடியரசிடம் (PRC) முதலில் முன்மொழிந்தவர் டேங் சியோபிங் என்பவராவர். 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஹொங்கொங் மற்றும் மக்காவ் பகுதிகளை மீண்டும் சீனாவுடன் ஒன்றினைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தப் பொழுதே அவர் தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதேவேளை சீனா சோசலிச சிறப்பியல்பு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், ஹொங்கொங், மக்காவ் மற்றும் தாய்வான் போன்றவைகள் தமக்கெனெ தனித்துவமான முதாலாளித்துவ பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகளைக் கொண்டிருக்க முடியும் எனும் கருத்தைத் தெரிவித்தார். இத்தீர்மாணத்தின் கீழ் தாய்வான் தொடர்ந்தும் தமது தனித்துவமான அரசியல், சட்டம், இராணுவம், பொருளாதாரம், நிதி பரிபாலன விவகாரம் உட்பட வெளிநாடுகளுடனான வர்த்தக மற்றும் பண்பாட்டு விடயங்களிலும் தனித்துவமான உடன்படிக்கைகளை மேற்கொண்டு வெளிவிவகார உறவை பேணமுடியும். அத்துடன்

மேற்கோள்கள்

  1. http://www.china.org.cn/english/features/china/203730.htm

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.