ஐதராக்சி கீட்டோன்
ஐதராக்சி கீட்டோன் (Hydroxy ketone) என்பது ஒரு வகையான கரிம வேதியியல் வேதி வினைக்குழுவாகும். கீட்டோன் மூலக்கூறின் விலாப்பக்கத்தில் ஒரு ஐதராக்சில் தொகுதி இணைந்திருக்கும் அமைப்பு ஐதராக்சி கீட்டோன் ஆகும். இரண்டு பிரதான வகைப்பாடுகளில் ஐதராக்சில் தொகுதியை வைக்கமுடியும். ஐதராக்சில் தொகுதி ஆல்பா நிலையில் வைக்கப்பட்டால் அது ஆல்பா ஐதராக்சி கீட்டோன் RCR′(OH)(CO)R) என்றும், பீட்டா நிலையில் வைக்கப்பட்டால் அது பீட்டா ஐதராக்சி கீட்டோன் RCR′(OH)CR2(CO)R) என்றும் பெயர் பெறுகிறது.
ஓர் α- ஐதராக்சி கீட்டோன் ஒரு முதனிலை ஆல்ககால் (எ.கா:ஐதராக்சி அசிட்டோன்) அல்லது ஒரு இரண்டாம்நிலை ஆல்ககாலை கொண்டிருக்கும். பெரும்பாலும் இரண்டாம் நிலை ஆல்ககால்கள் அசைலோயின்கள் என்று மேலும் விரிவாக வகைப்படுத்தப்படுகின்றன [1].
முக்கியமான β- ஐதராக்சி கீட்டோன்கள் ஆல்டால் கூட்டு விளைபொருள்கள் எனப்படுகின்றன.
மேற்கோள்கள்
- தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "acyloins". Compendium of Chemical Terminology Internet edition.