ஐக்கிய அமெரிக்காவின் வேளாண் உதவித்தொகை

ஐக்கிய அமெரிக்க விவசாயிகள் மிகக் குறைந்த மனித வளத்தோடு கூரிய உற்பத்தியைத் பெற்றாலும், ஒப்பீட்டளவில் இந்தியா, சீனா, ஆபிரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளின் கூடிய மனித வள உற்பத்தி தொகையுடன் போட்டியிடுவது கடினமே. இன்று 2% (~6 மில்லியன்) அமெரிக்கள்தான் வேளான் துறையில் ஈடுபட்டிருந்தாலும், அமெரிக்காவில் இவர்களது அரசியல், பண்பாட்டு செல்வாக்கு பெருதானது. இதை 60% (~679 மில்லியன்)செல்வாக்கு குறைந்த இந்திய விவசாயிகளோடு ஒப்பிடலாம். அமெரிக்க விவசாயிகள் உற்பத்தி செய்யும் பயிரையும் தொகையையும் பொறுத்து அவர்களுக்கு விலை உத்தரவாதத்தையும் தொழில்நுட்ப உதவிகளையும் அமெரிக்கா அரசு செய்கிறது. இதுவே ஐக்கிய அமெரிக்காவின் வேளாண் உதவித்தொகை எனப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு 8022 அமெரிக்க டொலர்கள் இவ்வாறு உதவித் தொகையாக அமெரிக்க விவசாயிகளுக்கு வளங்கப்பட்டது .

உதவித் தொகையும் திறந்த சந்தைக் கொள்கை முரண்பாடும்

திறந்த சந்தைப் படி விவசாயிகள் உலகச் சந்தையுடன் போட்டி போட்டிருக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் குறைந்த விலைக்கு உற்பத்தி செய்ய கூடிய வளர்ச்சியடைந்த நாட்டு விவசாயிகள் பலன் பெற்று இருப்பார்கள். ஆனால் அவ்வாறு செய்யாமல், உற்பத்தி தொகையை அரசின் உதவித் தொகைமூலம் கட்டுப்படுத்தி உணவுப் பொருட்களின் விலையை அமெரிக்க அரசு தீர்மானிக்க தக்கவாறு தற்போதைய ஏற்பாடு அமைந்திருக்கிறது. இது அமெரிக்கா பெரிதும் முன்னிறுத்து திறந்த சந்தை கொள்கைக்கு நேர் எதிரானது.

இவற்றையும் பாக்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.