ஐஎன்எஸ் கொச்சி

ஐஎன்எஸ் கொச்சி (INS Kochi (D64)) என்பது முற்றிலும் இந்தியாவில் கட்டப்பட்ட போர்க் கப்பல் ஆகும். இக் கப்பல் 30 செப்டம்பர் 2015 அன்று இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.[7] மும்பை கடற்படைத்தளத்தில் 30 செப்டம்பர் 2015 அன்று நடைபெற்ற விழாவில் இந்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர், ஐஎன்எஸ் கொச்சி போர்க்கப்பலை நாட்டிற்கு அர்ப்பணித்தார். உள்நாட்டுத் தயாரிப்பில் உருவான இரண்டாவது மிகப்பெரிய போர்க்கப்பல் ஐஎன்எஸ் கொச்சியில் விண்ணில் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணைகளையும் கொண்டது.

ஐஎன்எஸ் கொச்சி, போர்க் கப்பல்
கப்பல் (இந்தியா)
பெயர்: ஐஎன்எஸ் கொச்சி
இயக்குனர்: இந்தியக் கடற்படை
கட்டியோர்: மசகான் கப்பல் கட்டும் நிறுவனம், மும்பை
துவக்கம்: 25 அக்டோபர் 2005
வெளியீடு: 18 செப்டம்பர் 2009
பணியமர்த்தம்: 30 செப்டம்பர் 2015
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:கொல்கத்தா வகை போர்க் கப்பல்
பெயர்வு:7,500 டன்கள்[1][2]
நீளம்:163 மீ
வளை:17.4 மீ
விரைவு:30கடல் மைல்
உணரிகளும்
வழிமுறை முறைமைகளும்:
  • Thales Group LW-08 D-band air search radar[3]
  • Israeli Aircraft Industries, EL/M-2248 MF-STAR S-band Active Electronically Scanned Array multi-function radar
  • IAI EL/M-2238 L-band STAR surveillance radar
  • Bharat Electronics Limited HUMSA-NG bow sonar
  • BEL Nagin active towed array sonar[4]
  • BEL Electronic Modular Command & Control Applications (EMCCA Mk4) combat management system
மின்னணுப் போரும்:
  • Elbit Systems Deseaver MK II countermeasures systems and defensive aids suite
போர்க்கருவிகள்:Anti-air missiles:

4 × 8-cell VLS, for a total of 32;[5]
Barak 8 missiles (Range: 0.5 km (0.31 mi) to 90 km (56 mi)[6])

எதிரி கப்பலை தகர்க்கும் ஏவுகனைகள்:
2× 8-cell UVLM for 16 BrahMos கப்பல்களை அழிக்கும் ஏவுகனைகள்

பீரங்கிகள்:
1 × 130 mm பீரங்கிகள்
4 × AK-630 CIWS

நீர் மூழ்கி கப்பல் எதிர்ப்பு போர்முறை:
4× Torpedo tubes

RBU-6000 நீர் மூழ்கி எதிர்ப்பு ஏவுகனைகள்
காவும் வானூர்திகள்:2x ஹெலிகாப்டர்கள்:
  • Sea King
  • HAL Dhruv

163 மீட்டர் நீளமும், 17.4 மீட்டர் அகலமும், 7500 டன் எடையும் கொண்ட ஐஎன்எஸ் கொச்சி போர்க் கப்பல், போர் விமானங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்கை தாக்கும் ஆற்றல் கொண்டதாகும். இது 4000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்தப் போர்க்கப்பலில் 40 கடற்படை அதிகாரிகளும், 350 வீரர்களும் பணியாற்றுகின்றனர்.

மேற்கோள்கள்

  1. "Navy gets its largest destroyer". The Hindu. 13 July 2014. http://www.thehindu.com/news/national/navy-gets-its-largest-destroyer/article6205050.ece. பார்த்த நாள்: 15 July 2014.
  2. "Largest destroyer project of Navy hit by delay". Defence Express. 6 Jun 2013. http://www.defenceexpress.com/index.php/navy/item/277-largest-destroyer-project-of-navy-hit-by-delay. பார்த்த நாள்: 15 July 2014.
  3. "Bharat Electronics Ltd. awards LW08 contract to Thales". Thalesgroup.com (2 July 2008). பார்த்த நாள் 2010-04-02.
  4. "Indian Navy to get four new destroyers". dnaindia.com (17 March 2009). பார்த்த நாள் 2010-04-02.
  5. Som, Vishnu (16 August 2014). "On INS Kolkata, PM is Only Partially Correct". NDTV. http://www.ndtv.com/opinion/on-ins-kolkata-pm-is-only-partially-correct-654566. பார்த்த நாள்: 8 March 2015. "At the moment, she is designed to carry only 32 Barak surface-to-air missiles..."
  6. "Israeli navy equipping warships with new missile system: report". XinhuaNet. 29 July 2013. http://news.xinhuanet.com/english/world/2013-07/29/c_132581386.htm. பார்த்த நாள்: 29 July 2013.
  7. "INS Kochi stealth guided missile destroyer commissioned". The Economic Times (30 September 2015). பார்த்த நாள் 30 September 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.