ஏழாம் கிளியோபாற்றா

கிளியோபாட்ரா VII (பண்டைய கிரேக்கம்: Κλεοπάτρα Φιλοπάτωρ; கிமு 69 [1] – ஆகஸ்ட் 12, கிமு 30 ) கிளியோபாட்ரா என்ற வரலாறு சொல்லும் நபராவார். பேரழகி கிளியோபாட்ரா, கருப்பழகி என்றும் அறியப்படுகிறார். பண்டைய எகிப்தின் ஹெலனிய அரசியான இவர் ஏழாம் கிளியோபாட்ரா என்றும் அழைக்கப்பெறுகிறார். இவருக்கு முன் டோல்மயிக் அரச பரம்பரையில் ஆறு கிளியோபாட்ராக்கள் இருந்துள்ளனர்.

ஏழாம் கிளியோபாட்ரா
எகிப்தின் அரசி
ஆட்சிகிமு 51 12 ஆகஸ்ட் கிமு 30
தொலமி XIII (51 BC–47 BC)
தொலமி XIV (கிமு 47 – கிமு 44 )
சீசரியன் (கிமு 44 –கிமு 30 )
முன்னிருந்தவர்தொலமி XII
பின்வந்தவர்இல்லை (ரோம மாகாணம்)
அரச குலம்தொலமிய
தந்தைதொலமி XII
தாய்எகிப்தின் கிளியோபாட்ரா V

கிளியோபட்ரா தன்னுடைய தந்தையான 12ம் தொலமியுடன் ஆட்சி செய்தவர், அவருடைய இறப்பிற்கு பின்பு சகோதரர்கள் இருவரையும் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தையில்லை. அடுத்ததாக, ஜூலியஸ் சீசரைத் திருமணம் செய்து கொண்டவருக்கு தாலமி சீஸர் என்ற குழந்தையுண்டு. சீசரின் மரணத்திற்குப்பிறகு அவருடைய படைத்தளபதியான மார்க் ஆண்டனியுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகள். எனவே கிளியோபட்ராவிற்கு நான்கு கணவன்மார்கள், நான்கு குழந்தைகள். அறிவு, செயல்திறன், அழகு கொண்டவராக கிளியோபட்ரா அறியப்பெறுகிறார். இவர் வெண்மைநிறம் வாய்ந்தவர் என்றும், பேரழகி என்ற கருத்தும் வரலாற்றாசிரியர்களால் மறுக்கப்படுகிறது. வரலாற்று ஆசிரியரான ப்ளூடார்க் கிளியோபட்ராவினை பேரழகி இல்லை என்கிறார்.[1]

வாழ்க்கை வரலாறு

பன்னிரண்டாம் தொலமி க்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், பதின்மூன்றாம் தொலமி, பதினான்காம் தொலமி ஆகிய ஆண்மகன்களும் இருந்தனர். கிளியோபாட்ராவின் தாயாக இஸிஸ் என்பர் அறியப்பெறுகிறார். பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய எகிப்தின் முறைப்படி பெண் அரசாள இயலாது. எனவே கிளியோபாட்ரா தனது சகோதரன்களுடன் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் மூத்தவர் இவர் என்பதால் எகிப்தின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். அப்பொழுது கிளியோபாட்ராவிற்கு பதினாறு வயதென்றும், தொலமிக்குப் பத்து வயதுமென அறியமுடிகிறது. இவர் தனது தந்தை ஆட்சியிலிருந்த பொழுதே, அதிகாரத்தினைப் பகிர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது.

சீசருடனான வாழ்க்கை

ஜீன் லியோன் ஜேர்மி வரைந்த கிளியோபட்ரா மற்றும் ஜூலியஸ் சீசர் ஓவியம்

அமைச்சர்களும், வணிகர்களும் தொலமியை சந்தித்து தங்களுடைய எண்ணத்தினை நிறைவேற்றிட உபயோகித்துக் கொண்டனர். இதனால் கிளியோபாட்ராவின் அரசு பறி போனதுடன், எகிப்தினை விட்டு விரட்டப்பட்டாள். சிரியாவிற்குச் சென்றவள், ஜூலியஸ் சீசர் எனும் வீரன் எகிப்தை போர் செய்து வெல்ல வந்திருப்பதை அறிகிறாள். அதனால் சீசருடன் இணைந்து எகிப்தினை வெல்ல திட்டமிடுகிறாள். சீசருக்கும் கிளியோபாட்டராவின் கணவனுக்கும் நிகழந்த சண்டையில் சீசர் தொலமியைக் கொன்றுவிடுகிறார். கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் அவளைத் திருமணம் செய்து கொள்கிறார். இத்தம்பதிகளுக்குப் பிறந்தவராக சிசேரியன் அறியப்பெறுகிறார். தொலமியை கொன்றது கிளியோப்பட்ராவே என்றும் கருத்துண்டு.

ஆண்டனியுனான வாழ்க்கை

Antony and Cleopatra, by Lawrence Alma-Tadema

நெடுநாள் கழித்து மகன் மகளுடன் ரோமாபுரிக்குச் சென்றார் சீசர். ரோம் பாராளுமன்றத்தில் சீசரின் நண்பன் புருட்ஸ் சீசரைக் கொலை செய்தான். அதன்பின் ரோமில் சீசரின் வாரிசுகளுக்கும், தளபதிகளுக்கும் பதவி சண்டை நிகழ்ந்தது. கணவர் துனையின்றி இருந்த கிளியோபாட்ரா சீசரின் படைத்தளபதியான ஆண்டனி என்பவரை சந்தித்தாள். அவர் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்டார். அடுத்து தனது இரண்டு சகோதரிகளையும், மீதமிருந்த சகோதனையும் கிளியோபட்ராவே கொன்றதாகக் கூறப்படுகிறது. இதனால் வாரிசு சண்டை என்ற பேச்சுக்கே இடமின்றிபோனது. ஆண்டனி கிளியோபட்ராவிற்கு இரண்டாம் கிளியோபாட்ரா செலீன், அலெக்சாண்டர் ஹெலியோஸ் என இரட்டையர்கள் பிறந்தார்கள். அதன்பின் தொலமி பிலடெல்பஸ் என்பவரும் பிறந்தார்.

சீசரின் வாரிசான ஆக்டோவியஸ் சீசர் கிளியோபட்ராவை எதிர்த்தார். எகிப்தின் ஆட்சிக்காக ஆண்டனியுடன் ஆக்டோவியஸ் சண்டை மூண்டது. இதில் ஆண்டனி கொல்லப்பெற்றார்.

மரணம்

கிளியோபட்ராவின் மரணம் by Guido Cagnacci, 1658

ஆண்டனியின் மரணத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத கிளியோபட்ரா, தன்னை மகாராணி போல அலங்கரித்துக் கொண்டு விஷப்பாம்புகளை தீண்டும்படி செய்து உயிர் துறந்தாள். கிளியோபாட்ராவின் மரணத்தினை வரலாற்று ஆசிரியர்கள் சிலர் வேறுவிதமாகக் கூறுவதுண்டு. கிளியோபாட்ரா உடலழகு மீது மிகுந்த கவனம் செலுத்தியவர் என்பதால், பாம்பின் விஷம் தீண்டி இறந்தால் முகம் விகாரமடையும் என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்கிறார்கள்.

கிளியோபாட்ரா பண்டைய எகிப்தில் வழக்கத்திலிருந்த கொடிய தாவர விஷத்தினை அருந்தியே இறந்தார் என்கிறார் செபர் எனும் வரலாற்று அறிஞர். பண்டைய பாடலாசிரியர்களும் இதையே பாடல்களில் பாடியுள்ளார்கள் என்ற போதும், கிளியோபட்ரா பாம்பு தீண்டி இறந்தார் என்பதையே பல்வேறு ஓவியங்கள் விளக்குகின்றன.[2]

திறமை

கிளியோபாட்ராவை பேரறிவு உடையவர் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இவர், வானியல், சோதிடம் முதலிய பல கலைகளில் சிறந்து விளங்கியதாகவும், தானே ஏழுவகையான வாசனை திரவியங்களைத் தயாரித்ததாகவும் கருத்துண்டு. ஏழு மொழிகளை பேசவும், எழுதவும், படிக்கவும் கற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.

எகிப்தினை ரோமானியர்களிடமிருந்து காப்பாற்ற அவள் தனது வாழ்வைத் தியாகம் செய்தவள் என்ற கருத்தும் காணப்படுகிறது.

கிளியோபட்ராவின் நம்பிக்கைகள்

  • தினம் பாலில் குளிப்பவள்
  • கண்களில் பல வண்ண மைகளால் அலங்காரம் செய்துகொள்வாள்
  • கடல் முத்துக்களை வினிகரில் கரைத்து அருந்துவாள்.

வழி மரபு

எகிப்பத்தின் அரசியான கிளியோபட்ராவின் டோல்மயிக் வம்சம் மிகவும் புகழ்பெற்றதாகும். இவருடைய அன்னை இஸிஸூக்கு பன்னிரண்டாம் தொலமி மாமன் முறையாகிறது என்பதும், கிளியோபட்ராவின் முன்னால் இருந்தவர்களைப் பற்றியும் வம்ச வரைபடம் தெளிவாக விளக்குகிறது.

தாலமி V எபிப்ஹனேஷ்கிளியோபாட்ரா I (எகிப்து)
தாலமி VIII பய்ச்கோன்தாலமி VI Philometorகிளியோபாட்ரா II (எகிப்து)
கிளியோபாட்ரா III (எகிப்து))
தாலமி X அலெக்சாண்டார்Iகிளியோபாட்ரா Iதாலமி IX Lathyrosகிளியோபாட்ரா IV (எகிப்து)
Berenice III of Egyptதாலமி XII ஆலேட்ஸ்
கிளியோபாட்ரா V (எகிப்த்து)
கிளியோபாட்ரா VII

ஆதாரம்

  1. மருதன் , ஆனந்தவிகடன் .03 – 06 – 2009 .
  2. http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=12

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.