ஏற்காடு இளங்கோ

ஏற்காடு இளங்கோ (பிறப்பு: மார்ச் 19, 1961) ஓர் எழுத்தாளர். அறிவியல் சார்ந்த பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஏற்காடு இளங்கோ
ஏற்காடு இளங்கோ
பிறப்புமார்ச் 19, 1961
ஏற்காடு

வாழ்க்கைக் குறிப்பு

தமிழ்நாடு, நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்னும் ஊரில் எளிய குடும்பத்தில் பிறந்தார். தொடக்கக் கல்வியை பேளுக்குறிச்சியிலும் அறிவியல் இளையர் பட்டவகுப்பை நாமக்கல்லிலும், முதுகலைப் படிப்பை அண்ணாமலைப் பல்கலையிலும் முடித்தார். இவருக்கு ஜார்ஜ் டிமிட்ரோவ், ஹோசிமின் என இரு மகன்கள் உள்ளனர்.

பணியும் நூல்களும்

நடுவணரசு தாவர மதிப்பீட்டு ஆய்வு அலுவலகத்தில் பணி புரியும் இவர் அறுபத்தைந்து அறிவியல் நூல்கள் எழுதி இருக்கிறார். அவை மூட நம்பிக்கைகளைத் தகர்க்கும் அறிவியல் செய்திகள் நிரம்பியவை.

  • 'பழங்கள்' என்னும் புத்தகம் 'அனைவருக்கும் கல்வி' என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது .
  • ’செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்’ என்ற நூலும் ’அனைவருக்கும் கல்வி’ என்ற அமைப்பின் சார்பாக 38000 பள்ளிகளுக்கும் நூலகங்களுக்கும் வழங்கப்பட்டன.
  • 'விண்வெளி ஆயிரம்' 'நீரில் நடக்கலாம்' போன்ற நூல்களையும் கலிலியோ, ஐசக் நியூட்டன், லூயி பாஸ்டர், ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற அறிவியல் அறிஞர்கள் பற்றியும் எழுதியுள்ளார்.

சிறிய அளவிலும் பெரிய அளவிலும் இதுவரை 85 புத்தகங்கள் வெளிவந்துள்ளன. 'மனிதன் குரங்கிலிருந்துதான் பிறந்தானா?' என்ற இவருடைய நூல் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 11 ஆவது மாவட்ட மாநாட்டில் வெளியிடப்பட்டது[1]

வ.எண்புத்தகம்பதிப்பகம்வெளியான காலம்
1அதிசய தாவரங்கள்அறிவியல் வெளியீடுமார்ச் 2000
2சிறியதும் - பெரியதும் [2]அறிவியல் வெளியீடுஜூன் 2001
3அதிசய தாவரங்களும் அற்புத தகவல்களும் [3]சாரதா பதிப்பகம்டிசம்பர் 2002
4விஞ்ஞானிகளும் கண்டுபிடிப்புகளும்[3]சாரதா பதிப்பகம்நவம்பர் 2003
5அதிஷ்டக் கற்களும், அறிவியல் உண்மைகளும் [3]சீதை பதிப்பகம்டிசம்பர் 2004
6உலகை மாற்றிய விஞ்ஞானிகள் [3]சீதை பதிப்பகம்டிசம்பர் 2004
7பழங்கள்அறிவியல் வெளியீடுசெப்டம்பர் 2005
8கண்ணாடியின் கதை [3]சீதை பதிப்பகம்நவம்பர் 2005
9காய்கறிகளின் பண்பும், பயனும் [3]சீதை பதிப்பகம்டிசம்பர் 2005
10இயற்கை அதிசயங்கள்பாவை பதிப்பகம்மார்ச் 2007
11அறிவியலும், அற்புதங்களும்பாவை பதிப்பகம்மார்ச் 2007
12ஏழரைச் சனிஅறிவியல் வெளியீடுஏப்ரல் 2007
13நோபல் பரிசு பெற்ற பெண்கள் [4]மதி நிலையம் பதிப்பகம்மே 2007
14வியக்க வைக்கும் குகைகள்யுரேகா பதிப்பகம்2007
15நிலவில் ஓர் உணவகம்பாவை பதிப்பகம்அக்டோபர் 2007
16நீரில் நடக்கலாம் வாங்கபாவை பதிப்பகம்நவம்பர் 2007
17யூரி ககாரின்பாவை பதிப்பகம்நவம்பர் 2007
18நிலவில் நடந்த விண்வெளி வீரர்கள்பாவை பதிப்பகம்மார்ச் 2008
19பரிணாமத்தின் தந்தை சார்லஸ் டார்வின்பாவை பதிப்பகம்மார்ச் 2008
20செவ்வாய் கிரகமும் செவ்வாய் தோஷமும்அறிவியல் வெளியீடுமார்ச் 2009
21இந்தியாவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள்சீதை பதிப்பகம்மே 2009
22தாமஸ் ஆல்வா எடிசன்பாவை பதிப்பகம்ஜூலை 2009
23கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசோரி [5]சாரதா பதிப்பகம்ஜூலை 2009
24மனித வாழ்வில் மரங்கள்சீதை பதிப்பகம்செப்டம்பர் 2009
25வெற்றி கலிலியோவிற்கேசீதை பதிப்பகம்டிசம்பர் 2009
26ஸ்டெம் செல்கள்பாவை பதிப்பகம்ஆகஸ்ட் 2009
27லூயி பாஸ்டர்பாவை பதிப்பகம்ஆகஸ்ட் 2009
28ஐசக் நியூட்டன்சீதை பதிப்பகம்டிசம்பர் 2009
29பெண் வானவியல் அறிஞர்கள் [6]சீதை பதிப்பகம்டிசம்பர் 2009
30நவீன அதிசயங்கள் [3]பாவை பதிப்பகம்ஜூலை 2010
31வாழவிட்டு வாழ்வோம் [3]பாவை பதிப்பகம்ஜூலை 2010
32விந்தையான விலங்குகள்பாவை பதிப்பகம்ஆகஸ்ட் 2010
33மைக்கேல் பாரடேராமையா பதிப்பகம்அக்டோபர் 2010
34ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்யுரேகாடிசம்பர் 2010
35விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ்அறிவியல் வெளியீடுஜூலை 2011
36இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாஅறிவியல் வெளியீடுஜூலை 2011
37விண்வெளிப் பயணம்அறிவியல் வெளியீடுஜூலை 2011
38நிலவில் கால் பதித்த முதல் மனிதன் நீல் ஆர்ம்ஸ்ட்ராங்அறிவியல் வெளியீடுஜூலை 2011
39கல்பனா சாவ்லா [3]ராமையா பதிப்பகம்ஜூலை 2011
40கல்விச் சிந்தனையாளர் மால்கம் ஆதிசேஷையாபாவை பதிப்பகம்செப்டம்பர் 2011
41உலகின் முதல் பெண் விண்வெளி வீரர்அறிவியல் வெளியீடுஜனவரி 2012
42தமிழக பாரம்பரியச் சின்னங்கள்தில்லை பதிப்பகம்மே 2012
43தன்னம்பிக்கை நாயகன் ஸ்டீபன் ஹாக்கிங் [7]மங்கை பதிப்பகம்ஆகஸ்ட் 2012
44பூகம்பமும், சுனாமியும்சீதை பதிப்பகம்ஆகஸ்ட் 2012
45ஓசோன் படலத்தில் ஓட்டைமங்கை பதிப்பகம்ஆகஸ்ட் 2012
46பூமியின் வடிவம் ஜீயோயிடுUnique Mediaநவம்பர் 2012
47சுற்றுச்சூழல் ஒரு பார்வைசீதை பதிப்பகம்நவம்பர் 2012
48நோபல் குடும்பம் [3]பாவை பதிப்பகம்2012
49நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்பாவை பதிப்பகம்2012
50அறிவியல் களஞ்சியம் விண்வெளி 1000பாரதி புத்தகாலயம்டிசம்பர் 2012
51அணு முதல் அண்டம் வரைராமையா பதிப்பகம்2014
52குடிசைமின்னூல்ஜூன் 2014
53சர்வதேச தினங்கள்Unique Medai பதிப்பகம்2014
54தானியங்கள்மின்னூல்ஜூன் 2014
55விண்வெளி ஆய்வு நிலையம்மின்னூல்ஆகஸ்ட் 2014
56மனிதன் குரங்கிலிருந்து தான் பிறந்தானா?Unique Mediaமார்ச் 2013
57மனித பேரினத்தின் வரலாறுUnique Media2013
58உடல் உறுப்பு மாற்றுச் சாதனைகள்unique Media2013
59அதிசயம் நிறைந்த மனித உடல்சீதை பதிப்பகம்2014
60உடல் நலம் காத்திடுகசீதை பதிப்பகம்2014
61இந்திய தேசியச் சின்னங்கள்மின்னூல்அக்டோபர் 2014
62முதல் பார்வையற்ற பட்டதாரிப் பெண் ஹெலன் கெல்லர்அறிவியல் வெளியீடுமே 2014
63தன்னம்பிக்கை பேச்சாளர் நிக் வோய்ச்சிக்க்அறிவியல் வெளியீடுமே 2014
64மங்கள்யான்Unique Mediaமே 2014
65நம்பிக்கை எல்லாம் அறிவியல் அல்லUnique Mediaமே 2014
66விமானம் ஓட்டிய கைகள் இல்லாத பெண் ஜெசிக்கா காக்ஸ்மின்னூல்ஜூலை 2014
67பூமியின் எல்லையை தொட்டவர்கள்மின்னூல்ஜூலை 2014
68செல்லுக்குள்ளே செல்வோம்Unique Mediaஜூலை 2014
69தமிழ்நாட்டின் அடையாளச் சின்னங்கள்மின்னூல்2014
70உலகில் கொண்டாடப்படும் முக்கிய தினங்கள்மின்னூல்2014
71இந்தியாவின் தேசிய தினங்கள்மின்னூல்ஜூலை 2014
72உடல் நலத்தை கெடுக்கும் மைதாUnique Media
73சமூக அறிஞர்களின் வாசகங்கள்மின்னூல்2014
74பனிமனிதன் ஓட்சியூனிக் மீடியாநவம்பர் 2015
75சுற்றுச்சூழல் அறிஞர்களின்...மின்னூல்2015
76தெரிந்தும் தெரியாத பழங்கள்யூனிக் மீடியாமார்ச்சு 2016
77இந்திய குடியரசு தலைவர்கள்ராமையா பதிப்பகம்மார்ச்சு 2016
78அப்துல் கலாமின் கவிதைகளும் மேற்கோள்களும்மின்னுல்ஏப்பிரல் 2016
79மாணவர்களின் வழிகாட்டி அப்துல் கலாம்ராமையா பதிப்பகம்சூன் 2016
80மூன்றாவது கண்மின்னூல்சூலை 2016
81அரிய இயல் தாவரங்கள் (சேர்வராயன் மலை)ராமையா பதிப்பகம்2017
82சரித்திரம் காட்டும் புகைப்படங்கள்அறிவியல் வெளியீடு2015
83இந்தியத் தொல் பழங்கால வரலாற்றின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட்ராமையா பதிப்பகம்2017
84தமிழ் நாட்டின் முதலமைச்சர்கள்ராமையா பதிப்பகம்2017
85தற்காப்பு கலையும் சிலம்பாட்டமும்ராமையா பதிப்பகம்2017

பிற பொதுப் பணிகள்

  • 1987 ஆம் ஆண்டு முதல் அறிவியல் இயக்கத்தில் முனைப்பானவராக உள்ளார். தற்பொழுது சேலம் மாவட்டத் தலைவராக உள்ளார்.
  • மாணவர்களுக்கான மாத இதழ் 'துளிர்' ஆசிரியர் குழுவில் உறுப்பினராக இருக்கிறார்.
  • பொதுவிடத்தில் எச்சில் துப்புதல் சுகாதாரக் கேடு என்பதை அறிவியல் அடிப்படையில் விளக்கி மூன்று லட்சம் துண்டறிக்கைகள் விநியோகம் செய்து பரப்புரை இயக்கம் நடத்தினார்.
  • மைதாவினால் செய்யப்படும் பரோட்டா சாப்பிடுவதால் உடல் நலம் கெடும் என்பதை விளக்கி வருகிறார்.
  • பிளாஸ்டிக் தண்ணீர்ப் புட்டிகளை ஒரு வாரத்திற்கு மேல்பயன்படுத்தல் கூடாது என்று பரப்புரை செய்தார்.
  • ஏற்காட்டில் உள்ள பெரிய ஏரியில் மண்டிக் கிடந்த ஆகாயத் தாமரைகளை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் அறிவொளி இயக்கம் சார்பாக நீக்கி ஏரியைத் துப்புரவு செய்தார்.
  • மந்திரவாதிகள், போலிச் சாமியார்கள் செய்யும் ஏமாற்று வித்தைகளையும் கடவுள் பெயரைச் சொல்லி பரப்பும் மூடச்செயல்களையும் 'பொய்' என்று அறிவியல் அடிப்படையில் நிரூபித்து வரும் தம் மனைவிக்குத் துணை நிற்கிறார்.
  • மாணவர்களைப் பள்ளிகளில் சந்தித்து வானவியல் பற்றிய அறிவியல் உண்மைகளைச் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
  • ஏற்காட்டில் வாழ்ந்து வரும் இவர் மார்க்சியக் கொள்கைவழி அறிவியல் முறையில் நாத்திகராக விளங்கி வருகிறார்.
  • தம் இறப்பிற்குப் பிறகு தம் உடலை மருத்துவ ஆய்வுக்குப் பயன்படுத்தவேண்டும் என்று தம் விருப்ப ஆவணத்தில் பதிவு செய்துள்ளார்.
  • பொதுவகத்தில் தாவரவியல் பெயர்களுடனும், அதற்குரிய குறிப்புகளுடனும் பதிவேற்றுகிறார். அப்பதிவேற்றங்களை இத்தொடுப்பில் காணலாம்.
  • 'இந்தியத் தொல் பழங்கால வரலாற்றின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட் ' என்ற இவர் எழுதிய நூல் ஏற்காட்டில் ஹோலி டிரினிட்டி சர்ச்சில் உள்ள ராபர்ட் புரூஸ் பூட் அவர்களின் கல்லறையில் 2017 திசம்பர் 29 அன்று வெளியிடப்பட்டது.

ஆதாரம்

  1. ['http://www.dinamani.com/edition_dharmapuri/salem/2013/07/15/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/article1684311.ece?service=print மைதா மாவின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு - தினமணி] Jul 15, 2013 3:15 AM
  2. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ.
  3. "உங்களது தேடுதல் :- ஏற்காடு இளங்கோ". நூல் உலகம். பார்த்த நாள் 12 பெப்ரவரி 2014.
  4. நோபல் பரிசு பெற்ற பெண்மணிகள் தினமலர் புத்தகங்கள் பார்த்த நாள் பிப்ரவரி 11, 2014
  5. ஏற்காடு இளங்கோ. "கல்விச் சிந்தனையாளர் மரியா மாண்டிசேரி". வரலாறு. பார்த்த நாள் 12 பெப்ரவரி 2014.
  6. ஏற்காடு இளங்கோ. பெண் வானவியல் அறிஞர்கள். சீதை பதிப்பகம். http://books.google.com/books/about/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D.html?id=kVZTcgAACAAJ.
  7. ஸ்டீபன் ஹாக்கிங்: தன்னம்பிக்கையின் நாயகன். மங்கை வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF.html?id=uscSmQEACAAJ.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.