ஏறைக்கோன்
ஏறை என்பது மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மலைகளில் ஒன்று.
ஏறைக்கோன் சிறந்த போர்வீரன். குறமகள் இளவெயினி என்னும் பெண்பாற்புலவர் ஏறைக்கோன் வீரத்தைப் பாராட்டிப் பாடியுள்ளார்.[1] இந்தப் பாடலில் இவனது வள்ளண்மை கூறப்படவில்லை. என்றாலும் பாராட்டிய புலவரை இவன் பேணியிருக்கலாம்.
'பெருங்கல் நாடன்' என இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான்.
இவனது நான்கு பண்புகள் பாடலில் சுட்டபடுகின்றன.
- இவனைச் சேர்ந்தவர்கள் இவனுக்குத் தீங்கிழைத்தால் அதனை அவன் பொறுத்துக்கொள்வானாம்.
- பிறர் தவறு செந்தால் அதற்காகத் தான் நாணுவானாம்.
- தான் போரிடும் படைக்குப் பழி வாராமல் போரிடும் வல்லமை பெற்றவனாம்.
- வேந்தன் அவையில் பீடுடன் வீரநடை போடுவானாம்.
அடிக்குறிப்பு
- புறநானூறு 157
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.