ஏகம்பவாணர் மனைவி பாடல்

ஏகம்பவாணர் மனைவி பாடல் என்னும் குறிப்போடு ஒரே ஒரு பாடல் கிடைத்துள்ளது.[1] உழவர் நாற்றைப் பறித்து,, சேற்றில் தழை மிதித்த வயலில் நடுவர். மூவேந்தர் முடிகளை நாற்றுமுடிகளாக்கி கம்பன் தன் பாடலில் நட்டான் என்று இந்தப் பாடல் கம்பனைப் பாராட்டுகிறது.

சேனை தழையாக்கி செங்குருதி நீர்தேக்கி
ஆனை மிதித்த வருஞ்சேற்றின்- மானபரன்
பாவேந்தர் வேந்தன் பறித்து நட்டானே கம்பன்
மூவேந்தர் தங்கண் முடி. பாடல் 61

அடிக்குறிப்பு

  1. தனிப்பாடல் திரட்டு நூல் பக்கம் 45-54 பாடல் எண் 61
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.