ஏ. எல். அழகப்பன்

ஏ. எல். அழகப்பன் என்பவர் தமிழ் திரையுலக நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். சில படங்களை தயாரித்து பின்பு தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக பதவியில் இருந்தார். சில தமிழ்த் திரைப்படங்களில் குணசித்திர நடிகராக நடித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழக அரசியல்வாதி ஆவார்.[1]

குடும்பம்

இவரது மகன்கள் ஏ. எல். விஜய் மற்றும் உதயா ஆவர். இதில் விஜய் என்பவர் இயக்குநராகவும், உதயா என்பவர் நடிகராகவும் [2]. தமிழ்த் திரைபட துறையில் உள்ளனர்.

வாழ்க்கை

தமிழ்நாடு தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக 2004இல் பதவி ஏற்றவர். 2010 ஆண்டு முதல் நடித்துக் கொண்டு வரும் இவருக்கு ஈசன் திரைப்படத்தில் வில்லன் நடிப்பு நல்ல திருப்புமுனையாக இருந்தது[3].

நடிப்பு

  • 2010 ஈசன் படம் விஜய் சிறந்த வில்லன் பதக்கத்திற்கு நியமனம் பெற்றது.
  • 2014 கதை திரைக்கதை வசனம் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
  • 2014 நெருங்கி வா முத்தமிடாதே திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தயாரிப்பு

  1. சைவம் (2014),
  2. இது என்ன மாயம் (2015),
  3. ஒரு நாள் இரவில் (2016),
  4. சில சமயங்களில் (2017) மற்றும்
  5. வனமகன் (2017) போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.