எஸ். இராமச்சந்திரன்

எஸ். இராமச்சந்திரன் (பிறப்பு: திசம்பர் 4, 1949) இலங்கையின் மெல்லிசை, மற்றும் பொப் இசைப் பாடகர்.

வாழ்க்கைச் சுருக்கம்

யாழ்ப்பாண மாவட்டம், நவாலி என்ற ஊரில் பிறந்த இராமச்சந்திரன் வளர்ந்தது அரியாலையில். அரியாலை சிறீபார்வதி வித்தியாசாலையில் ஆரம்பக் கல்வி கற்று பின்னர் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்றார். பாடசாலை நாட்களிலேயே யாழ்ப்பாணம் கண்ணன் கோஷ்டி இசைக் குழுவில் இணைந்து கோயில் திருவிழாக்களில் பாடியிருக்கிறார். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் இலங்கை வானொலியில் ஒலிப்பதிவாளராக 1970இல் பணியில் சேர்ந்தார். வானொலி இசைப் பகுதி நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றினார். இவரது மனைவி பத்மாசனி. இவர்களுக்கு கானரூபன், மூகாம்பிகை என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

மெல்லிசைப் பாடகராக

1970களின் ஆரம்பம் இலங்கையில் ஈழத்து இதழ்கள், ஈழத்துத் திரைப்படங்கள், மெல்லிசைப்பாடல்கள், பொப் இசைப் பாடல்கள் எனக் கொடி கட்டிப்பறந்த காலம். இராமச்சந்திரனுக்கும் வானொலியில் பாடும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இவர் "வான நிலவில் அவளைக் கண்டேன் நான் ....!", "ஆடாதே ஆடாதே சூதாட்டம் ஆடாதே...." போன்ற பல புகழ் பெற்ற பாடல்களைப் பாடினார். கொழும்பு தமிழ் கலைஞர் சங்க மூலமாக பல கலை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.