எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் (LG Electronics, கொரிய மொழி: LG전자) தென் கொரியாவில் உள்ள சியோல் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு மின்னணு நிறுவனம். இது உலகம் முழுவதிலும் 119 துணை நிறுவனங்களையும் 82,000 தொழிலாளர்களையும் கொண்ட எல்ஜி குழுமத்தின் ஒரு பகுதி. 2011ம் ஆண்டு தொலைக்காட்சிப் பெட்டிகள் தயாரிப்பில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக இந்நிறுவனம் இருந்தது.[1] இந்நிறுவனம் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ்
LG전자
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகை1958
தலைமையகம்சியோல், தென் கொரியா
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்கூ போன் - ஜூன், (துணைத் தலைவர் மற்றும் சிஈஓ)
தொழில்துறைநுகர்வோர் மின்பொருட்கள்
நகர்பேசி கருவிகள்]
வீட்டுவேலைக் கருவிகள்
தொலைத்தொடர்பு
உற்பத்திகள்கணினி திரைகள்
ப்ளாஷ் நினைவகம்
திரவப் படிகக் காட்சி திரைகள்
பிளாஸ்மா திரைகள்
OLED Displays
தொலைக்காட்சிகள்
டிவிடி ப்ளேயர்
ப்ளூ-ரே ப்ளேயர்
Home Cinema Systems
திரைப்பட ப்ரொஜக்டர்
மொபைல்
மடிக்கணினி
CD and DVD Drives
குளிர்சாதன பெட்டி
சலவை இயந்திரங்கள்
வெற்றிட சுத்தப்படுத்திகள்
குளிரூட்டிகள்
பணியாளர்82,772 (29,948 கொரியாவில் / 52,824 பிற நாடுகள்) – 2006 ஆண்டு தரவுகள்
தாய் நிறுவனம்எல்ஜி குரூப்
இணையத்தளம்www.lg.com

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் தற்போது நான்கு வணிக அலகுகளைக் கொண்டு இயங்குகிறது. இவை வீட்டுப் பொழுதுபோக்கு (Home Entertainment), நகர் தொலைத்தொடர்பு (Mobile Communications), வீட்டுக் கருவிகளும் வளித் தீர்வுகளும் (Home Appliances & Air Solutions), தானுந்துக் கூறுகள் (Vehicle Components) என்பவை ஆகும். எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் செனித் நிறுவனத்தின் உரிமையாளராக இருப்பதுடன் எல்ஜி டிஸ்பிளே () நிறுவனத்தின் 37.9 வீதப் பங்குகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.[2]

மேற்கோள்கள்

  1. "LG Aims to Boost Television Market Share With 3-D, Web-Connected Models". Bloomberg (2011-02-16). பார்த்த நாள் 2013-07-11.
  2. "LG디스플레이" (Korean). Daum. பார்த்த நாள் 2013-06-22.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.