எல் தோர்னிங் இசுமிட்

எல் தோர்னிங்-இசுமிட் (Helle Thorning-Schmidt, டேனிய பலுக்கல்: [ˈhɛlə ˈtoɐ̯neŋ ˈsmed]; பிறப்பு 14 திசம்பர் 1966) ஓர் டேனிசு அரசியல்வாதியும் தற்போதைய டேனிசு சமூக சனநாயகவாதக் கட்சியின் தலைவரும் ஆவார்.

எல் தோர்னிங் இசுமிட்
Helle Thorning-Schmidt
டென்மார்க் பிரதமர்
எதிர்நோக்கி
பதவியேற்பு
செப்டம்பர் 2011
அரசர் மார்கரெத் II
முன்னவர் லார்சு லோக் ரசுமுசேன்
சமூக சனநாயகவாத கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 ஏப்ரல் 2005
முன்னவர் மோகென் லிக்கெடோஃப்ட்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
8 பெப்ரவரி 2005
டென்மார்க் தொகுதிக்கான ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1999–2004
தனிநபர் தகவல்
பிறப்பு 14 திசம்பர் 1966 (1966-12-14)
ரோடோவ்ரெ, டென்மார்க்
அரசியல் கட்சி சமூக சனநாயகவாதக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) இசுடீபன் கின்னாக்
படித்த கல்வி நிறுவனங்கள் கோபன்ஹேகன் பல்கலைக்கழகம்
ஐரோப்பா கல்லூரி

2005ஆம் ஆண்டு டேனிசு நாடாளுமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு கட்சித்தலைவராக மோகென் லிக்கெடோஃப்ட்டிற்கு மாற்றாக பதவியேற்றார்.[1] 2007ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் தனது கட்சிக்கு பெரும்பான்மை பெற இயலவில்லை. 2011ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் அவரது கட்சி பெற்ற வெற்றிகளை அடுத்து எதிர்க்கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டால் அடுத்த டேனிசு பிரதமராக பொறுப்பேற்கக் கூடிய வாய்புள்ளவராக உள்ளார். அரசி மார்கெரெத்தால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டால் இவரே நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார்.

1999ஆம் ஆண்டு முதல் 2004 வரை ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டென்மார்க் தொகுதியின் உறுப்பினராக பணியாற்றி உள்ளார். 2005ஆம் ஆண்டு முதல் டென்மார்க் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்குகிறார்.

ஆட்சி இயலில் கோபன்ஃகேகன் பல்கலைக்கழக்கம் மற்றும் ஐரோப்பிய கல்லூரியில் மேம்பட்ட பட்டங்களை பெற்றுள்ளார்.

மேற்கோள்கள்

  1. "Profil: Helle Thorning-Schmidt – VG Nett om Danmark". Vg.no. பார்த்த நாள் 2011-09-16.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.