எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை
எல். டி. சாமிக்கண்ணு பிள்ளை (பி. பெப்ரவரி 11, 1865 - இ. செப்டம்பர் 10, 1925) ஒரு இந்திய அரசியல்வாதி, வரலாற்றாளர், மொழியியலாளர் மற்றும் வானியலாளர். சென்னை மாகாணத்தில் ஒரு ஏழை கிறித்தவக் குடும்பத்தில் பிறந்தார். சென்னையில் பள்ளிக்கல்வி முடித்தனர் சட்டப் படிப்பினை முடித்தார்.[1]
லூயிஸ் டாமினிக் சாமிக்கண்ணு பிள்ளை | |
---|---|
சென்னை மாகாண சட்டமன்ற அவைத்தலைவர் | |
பதவியில் பெப்ரவரி 1925 – செடம்பர் 10, 1925 | |
ஆளுநர் | ஜார்ஜ் கோஷன் |
முன்னவர் | பெருங்காவலூர் ரஜகோபாலச்சாரி |
பின்வந்தவர் | வி. எஸ். நரசிம்ம ராஜூ |
சென்னை மாகாண தலைமைச் செயலர் | |
பதவியில் 1920–1925 | |
பின்வந்தவர் | ஜி. டி. போக் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | பெப்ரவரி 11, 1865 சென்னை |
இறப்பு | செப்டம்பர் 10, 1925 60) ராயபுரம், சென்னை | (அகவை
தேசியம் | இந்தியர் |
சமயம் | உரோமன் கத்தோலிக்கம் |
1920-25 காலகட்டத்தில் சென்னை மாகாண அரசின் தலைமைச் செயலராகப் பணியாற்றினார். 1924ல் சென்னை மாகாண சட்டமன்றத்தின் அவைத்தலைவராக இருந்த பெருங்காவலூர் ராஜகோபாலச்சாரி பதவி விலகியதால், அவைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் நீதிக்கட்சி சார்பாகப் போட்டியிட்ட சாமிக்கண்ணு வெற்றிபெற்று அவைத்தலைவரானார். தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அவைத்தலைவர் அவரே. அவைத்தலைவராக இருந்த போது சட்டமன்ற நூலகத்தை உருவாக்கினார். பதவியில் இருக்கும் போதே மரணமடைந்தார். திவான் பகதூர் பட்டம் பெற்ற இவர், 1924ல் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு அமைப்புப் பட்டியலில் (Order of the Indian Empire) இடம் பெற்றார்.[2][3][4][4]
எழுதிய நூல்கள்
- Panchang and Horoscope.
- An Indian ephemeris, A. D. 1800 to A. D. 2000.
- Indian Chronology. 1911.
குறிப்புகள்
- Tamil Lexicon. University of Madras. 1982. பக். xviii.
- S. S. Bhalerao (1977). The Second Chamber: its role in modern legislatures : the twenty-five years of Rajya Sabha. Rajya Sabha. பக். 424.
- S. Muthiah (2004). Madras Rediscovered. East West Books (Madras) Pvt Ltd. பக். 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-88661-24-4.
- "Obituaries". Nature 116 (550): 550. 1925. doi:10.1038/116550c0. http://www.nature.com/nature/journal/v116/n2919/abs/116550c0.html.
மேற்கோள்கள்
- Leo Proserpio (1931). L. D. Swamikannu Pillai:A Biographical Study. Codialbail Press.