எலிசபெத் அலெக்சாந்தர்
பிரான்செசு எலிசபெத் சோமர்வில்லி கால்டுவெல் (Frances Elizabeth Somerville Alexander, 13 திசம்பர் 1908 – 15 அக்டோபர் 1958) ஒரு பிரித்தானியப் புவியியலாளரும் கல்வியியலாளரும் இயற்பியலாளரும் கதிர்வீச்சு வானியலாளரும் ஆவார். இவரது போர்க்கால இராடார் பணிகளும் வானொலிப் பணிகளும் கதிர்வீச்சு வானியலைத் தோற்றுவித்தன. இவர் முனைவர் பட்டத்தை கேம்பிரிட்ஜின் நியூன்காம் கல்லூரியில் பெற்றார். இவர் 1938 முதல் 1941 வரை சிங்கப்பூர் நாவாய்த் தளத்தில் கதிர்வீச்சு திசை கண்டுபிடிப்பில் ஈடுபட்டார். சிங்கப்பூருக்கு நியூசிலாந்தில் இருந்து வர முடியாத்தால் 1941 சனவரியில், நியூசிலாந்து வெல்லிங்டனில் இருந்த வானொலி வளர்ச்சி ஆய்வகத்தில் செயல்முறை ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ஆனார். 1945 இல், நார்போக் தீவில் உணரப்பட்ட பிறழ்வான இராடார்க் குறிகைகள் சூரியனால் உருவாகியவை என இவர் மிகச் சரியாக விளக்கினார். கதிர்வீச்சு வானியலில் இந்த விளக்கம் மிக முன்னோடிப் பணியாகும். இவர் இதனால் முதல் பெண் கதிர்வீச்சு வானியலாளர் ஆனார்.[1]
எலிசபெத் அலெக்சாந்தர் Elizabeth Alexander | |
---|---|
பிறப்பு | பிரான்செசு எலிசபெத் சோமர்வில்லி கால்டுவெல் திசம்பர் 13, 1908 மெர்ட்டன், சரே, இங்கிலாந்து |
இறப்பு | 15 அக்டோபர் 1958 49) இபாதான், நைஜீரியா | (அகவை
தேசியம் | பிரித்தானியர் |
துறை | |
கல்வி கற்ற இடங்கள் | நியூன்காம் கல்லூரி, கேம்பிரிட்சு |
துணைவர் | நார்மன் அலெக்சாந்தர் |
மேற்கோள்கள்
- Sullivan, Woodruff T., III (2009). Cosmic Noise – A History of Early Radio Astronomy. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521765244. http://www.cambridge.org/gb/academic/subjects/astronomy/astrophysics/cosmic-noise-history-early-radio-astronomy?format=HB.
மேலும் படிக்க
- Orchiston, Wayne (2016). "Dr Elizabeth Alexander and the Mysterious ‘Norfolk Island Effect’". Exploring the History of New Zealand Astronomy. Astrophysics and Space Science Library 422: 629–651. doi:10.1007/978-3-319-22566-1_23. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-319-22566-1.
- Department of Scientific and Industrial Research, The Department of Internal Affairs Te Tari Taiwhenua (2009). World War 2 Narratives. No. 3 Radar Copy. Copy No. 3. Archives Reference: AAOQ W3424 16 Archives New Zealand. http://digital-library.canterbury.ac.nz/data/library7/ebooks_open_access%5Cww2_narrative_radar.pdf.