எலன் சாயர் கோகு
எலன் பேட்டிள்சு சாயர் கோகு (Helen Battles Sawyer Hogg), CC (1 August 1905 – 28 January 1993) ஓர் அமெரிக்க-கனடிய வானியலாளர் ஆவார். இவர் பேரியல் கொத்துகள், மாறும் விண்மீன்கள் பற்றிய முன்னோடி ஆய்வுக்காக பெயர்பெற்றவர். இவர் பல வானியல் அமைப்புகளுக்கு முதல் பெண் தலைவராக இருந்துள்ளார். இவர் தன்காலச் சிறந்த அறிவியல் பெண்மணியாகவும் விளங்கியுள்ளார். அப்போது பல பல்கலைக்கழகங்கள் பெண்களுக்கு அறிவியல் பட்டமேதும் வழங்குவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அறிவியல் பரப்புரையும் அறிவியல் இதழ்ப்பணியும் Toronto Star ("With the Stars", 1951–81), Journal of the Royal Astronomical Society of Canada ("Out of Old Books", 1946–65) ஆகியவற்றில் வானியல் பத்திகளாக அமைந்தன. இவர் தன்காலத்தில் அறுபது ஆண்டுகளாக மாபெரும் அறிவியலாளராகவும் அருளார்ந்த ஆளுமையாகவும் மதிக்கப்பட்டார்.[1]
எலன் சாயர் கோகு Helen Sawyer Hogg | |
---|---|
![]() எலன் சாயர் கோகு பட்டயம், கனடிய அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம்]] | |
பிறப்பு | ஆகத்து 1, 1905 உலோவல், மசாசூசட் |
இறப்பு | 28 சனவரி 1993 87) இரிச்மாண்டு கில், ஒண்டாரியோ | (அகவை
துறை | வானியல் |
பணியிடங்கள் | டேவிட் டன்லப் வான்காணகம், டொராண்டொ பல்கலைக்கழகம் |
அறியப்படுவது | பேரியல் கொத்துகள் |
விருதுகள் | வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது (1949) இரிட்டனவுசு பதக்கம் (1967) கிளம்ப்கே இராபெர்ட்சு விருது (1983) |
சொந்த வாழ்க்கை
எலன் மாரடைப்பால் 1993 ஜனவரி 28 இல் ஒண்டாரியொ, இரிச்மாண்டு கில் எனுமிட்த்தில் இறந்தார்.[2]
தகைமைகளும் விருதுகளும்

விருதுகள்
- அமெரிக்க வானியல் கழக வானியலுக்கான ஆன்னி ஜம்ப் கெனான் விருது, 1950.[3]
- பசிபிக் வானியல் கழக கிளம்ப்கே இராபெர்ட்சு விருது, 1984.[4]
- கனடிய அரசு நிறுவன சாந்த்போர்டு விருது, 1985.[5]
- இரிட்டனவுசு வானியல் கழக வெள்ளிப் பதக்க விருது, 1967.[6]
- கனடிய நூற்றாண்டுப் பதக்கம், 1967.
தகைமைகள்
- கனடிய ஆணை அலுவலர், 1968. பிறகு 1976 இல் கனடியத் துணைவராக பதவி உயர்வு – இது கனடாவிலேயே மிக உயர்ந்த தகைமை ஆகும்.[7][8]
- சிறுகோள் 2917 சாயர் கோகு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டது.[3]
- ஒண்டாரியொ ஒட்டாவா தேசிய அறிவியல் அருங்காட்சியகமும் சிலியில் உள்ள டொராண்டோ பல்கலைக்கழகத் தெற்கு வான்காணகத்தின் தொலைநோக்கியும் இவருக்குக் காணிக்கையாக்கப் பட்டன.[4]
மேற்கோள்கள்
- Shearer, B.F., & Shearer, B.S. (1997). Notable Women in the Physical Sciences: A Biographical Dictionary Westport, Conn.: Greenwood Press.
- Helen Battles Sawyer Hogg, University of Toronto: Web.
- Archived copy at WebCite (November 22, 2005).
வெளி இணைப்புகள்
- Astronomy was Helen Hogg's lifetime work
- U.Toronto biography
- Biography
- Helen Sawyer Hogg Honored
- Out of Old Books: Essays on the History of Astronomy by Helen Sawyer Hogg
- Oral History interview transcript with Helen Sawyer Hogg 17 August 1979, American Institute of Physics, Niels Bohr Library and Archives
- Bibliography from the Astronomical Society of the Pacific
- The San Diego Supercomputer Center Presents Women in Science, A Selection of 16 Significant Contributors
- University of Toronto Archives and Records Management Services
- Archival papers held at University of Toronto Archives and Records Management Services