எரோடோட்டசு

எரோடோட்டசு (Ἡρόδοτος, Herodotus) அனட்டோலியாவில் உள்ள ஆலிகார்னாசசைச் (Ἁλικαρνᾱσσεύς, Halicarnassus) சேர்ந்த ஒரு கிரேக்க வரலாற்றறிஞா் ஆவார். கிமு 5 ஆம் நூற்றாண்டில் (கிமு 484 - கிமு 425) வாழ்ந்த இவர் மேற்கு நாடுகளின் பண்பாட்டில் வரலாற்றின் தந்தை எனப்படுகிறார். தேவையான தகவல்களை முறைப்படியாகச் சேகரித்து, ஓரளவுக்கு அவற்றின் துல்லியத்தைச் சோதித்து, ஒழுங்கான அமைப்பில் அவற்றைத் தெளிவாக விளக்கிய முதல் வரலாற்றாளர் இவராவார்.

எரோடோட்டசு
எரோடோட்டசின் மார்பளவு சிலை
பிறப்புஅண். 484 BC
ஆலிகார்னாசசு, காரியா(Caria), அனட்டோலியா
இறப்புஅண். கிமு 425
தூரீ, சிசிலி அல்லது பெல்லா, மசிடோன்
பணிவரலாற்றாளர்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.