எரிவெள்ளி

எரி விண்மீன் (Meteoroid) [1] என்பது புறவெளியில் இருக்கும் சிறிய பாறைகள் அல்லது உலோகங்கள் நிறைந்த ஒரு பொருளாகும். இதை எரிவெள்ளி என்றும் அழைக்கிறார்கள்.

எரிவிண்மீன் எரிகல்லாகவும் வின்கல்லாகவும் மாறுதல்: எரிவிண்மீன் எப்படி வளிமண்டலத்தில் பிரவேசித்து, ஓர் எரிகல்லாக புலப்பட்டு புவியின் மேற்பரப்பில் ஒரு விண்கல்லாக மாறுகிறது என்பதைக் காட்டும் படம்
லியோனிது எரிவெள்ளி, 2009 இல் காணப்பட்ட லியோனிது எரி மழையில் காணப்பட்ட ஒரு எரிவெள்ளி.

எரிவெள்ளி என்பது மண்ணளவில் இருந்து பெரிய ஒரு மீட்டர் அகல கல்லளவு வரைக்கும் அளவு கொண்டு சூரிய மண்டலத்தில் இருக்கும் பொருள் ஆகும்[2].இதைவிட சிறிய அளவில் காணப்படும் எரிபொருள்களை நுண்ணிய எரிவிண்மீண் அல்லது விண்வெளி தூசு என்கிறார்கள் [2][3][4]. அனைத்துலக வானியல் ஒன்றியத்தின் வரையறைப்படி இது சிறுகோளை விட மிகச் சிறியதாக இருக்க வேண்டும் என்கிறார்கள். இவை பூமியை நோக்கி வரும்போது, பூமியைச் சுற்றியுள்ள வாயுவோடு உரசி சூடேறி எரிந்துகொண்டே வந்து விழும். இவற்றில் பெரும்பாலானவை வால்மீன்கள் அல்லது நட்சத்திரங்களின் சிறு துண்டுகளாகும். மற்றவை சந்திரன் அல்லது செவ்வாய் போன்ற விண்பொருள்களின் மோதல்களால் தோன்றும் குப்பைகள் ஆகும் [5][6][7].

மேற்கோள்கள்

  1. "meteoroid Meaning in the Cambridge English Dictionary".
  2. Rubin, Alan E.; Grossman, Jeffrey N. (January 2010). "Meteorite and meteoroid: New comprehensive definitions". Meteoritics & Planetary Science 45 (1): 114–122. doi:10.1111/j.1945-5100.2009.01009.x. Bibcode: 2010M&PS...45..114R. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1945-5100.2009.01009.x/abstract;jsessionid=49F5E412A475304A82B1E022F5B9270D.d04t03.)
  3. Atkinson, Nancy (2 June 2015). "What is the difference between asteroids and meteorites?". Universe Today.
  4. "meteoroids". The Free Dictionary. பார்த்த நாள் 1 August 2015.
  5. "Meteoroid". National Geographic. மூல முகவரியிலிருந்து 7 October 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 24 August 2015.
  6. "Meteors & Meteorites". NASA. பார்த்த நாள் 1 August 2015.
  7. "Asteroid Fast Facts". NASA (31 March 2014). பார்த்த நாள் 1 August 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.