மு. கா. அகமது
முகம்மது காசிம் அகமது (M. C. Ahamed) இலங்கை அரசியல்வாதியும், கல்முனை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கல்முனை நகரசபையின் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் எம். எஸ். காரியப்பரின் மருமகன் ஆவார்.
முகம்மது காசிம் அகமது Mohamed Cassim Ahamed நாஉ | |
---|---|
கல்முனை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் சூலை 1960 – 1965 | |
முன்னவர் | எம். எஸ். காரியப்பர் |
பின்வந்தவர் | எம். எஸ். காரியப்பர் |
பதவியில் 1965–1977 | |
பின்வந்தவர் | ஏ. ஆர். மன்சூர் |
தனிநபர் தகவல் | |
இறப்பு | சூலை 3, 2008 கொழும்பு |
தேசியம் | இலங்கையர் |
அரசியல் கட்சி | இலங்கை சுதந்திரக் கட்சி |
பிற அரசியல் சார்புகள் |
இலங்கை தமிழரசுக் கட்சி |
வாழ்க்கை துணைவர்(கள்) | செய்யது நாச்சி சேகுலெப்பை |
தொழில் | அரசியல்வாதி |
சமயம் | இசுலாம் |
அரசியலில்
எம். சி. அகமது மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தலில் கல்முனை தேர்தல் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டு 1,280 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.[1]
பின்னர் இவர் சூலை 1960 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு 1,965 வாக்குகளால் எம். எஸ். காரியப்பரைத் தோற்கடித்து நாடாளுமன்றம் சென்றார்.[2]
மீண்டும் 1965 தேர்தலில் கல்முனைத் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு மூன்றாவதாக வந்து தோல்வியடைந்தார்.[3] ஆனாலும், இத்தேர்தலில் வெற்றி பெற்ற எம். எஸ். காரியப்பர் சில மாதங்களில் ஊழல் குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியை இழந்தார். இதனை அடுத்து கல்முனைத் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடைபெற்றதில், எம். சி. அகமது இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4] பின்னர் 1970 தேர்தலில் அதே கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5]. 1977 தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[6]
மேற்கோள்கள்
- "Result of Parliamentary General Election 1960-03-19". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
- "Result of Parliamentary General Election 1960-07-20". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
- "Result of Parliamentary General Election 1965". Commission.
- "RESULTS OF BY -ELECTIONS SUBSEQUENT TO PARLIAMENTARY GENERAL ELECTION -1965". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
- "Result of Parliamentary General Election 1970". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
- "Result of Parliamentary General Election 1977". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.