எம். சாரதா மேனன்
எம். சாரதா மேனன் (M. Sarada Menon) என்பவர் இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் மற்றும் ஸ்கார்ப் என்னும் தொண்டு நிறுவனத்தை தொடங்கிய பெண்மணி ஆவார்[1]. பத்ம பூசண் விருது, அவ்வையார் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.[2][3]
எம். சாரதா மேனன் | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 5, 1923 மங்களூர், கருநாடகம், இந்தியா |
பணி | மனநல மருத்துவர் சமூகப் பணியாளர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1951 இலிருந்து |
அறியப்படுவது | ஸ்கார்ப் (SCARF) |
விருதுகள் | பத்ம பூசண் அவ்வையார் விருது மாநிலவளவில் சிறந்த மருத்துவர் விருது |
வலைத்தளம் | |
இணையதளம் (SCARF) |
பணிகள்
மனவியல் படிப்பை சென்னை கிறித்தவக் கல்லூரியிலும் எம்டி கல்வியை சென்னை மருத்துவக் கல்லூரியிலும் முடித்தார். மனநல சென்னை நிறுவனத்தில் கண்காணிப்பாளாராகப் பணியில் 1961இல் சேர்ந்தார். அரசின் மனநல மருத்துவ மனையின் தலைவராகவும் இருந்தார்[4].
1984 இல் ஸ்கார்ப் என்னும் சேவை நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அந்நிறுவனம் மன நோயாளிகளைப் பேணுதல், அவர்களுக்கு சிகிக்சை, மறுவாழ்வு அளித்தல், தொழில், வேலை வாய்ப்புகளுக்கான பயிற்சிகள் அளித்தல் போன்றவற்றைச் செய்கிறது. தமிழ்நாடு அரசு மருத்துவர் சாரதா மேனனுக்கு 2016 ஆம் ஆண்டுக்குரிய அவ்வையார் விருதை வழங்கி அவரைக் கவுரவித்தது.[5]
மேலும் சென்னையில் உள்ள இந்தியன் வளர்ச்சி அறக்கட்டளையின் சார்பில் சாரதா மேனனுக்கு 2016 ஆம் ஆண்டுக்கான அன்னை தெரசா நினைவு விருது வழங்கப்பட்டது.[6]
மேற்கோள்
- "Sarada Menon Chosen for Avvaiyar Award". The Indian Express (3 March 2016). பார்த்த நாள் May 23, 2016.
- "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2016). பார்த்த நாள் January 3, 2016.
- http://www.thehindu.com/news/cities/chennai/avvaiyar-award-for-sarada-menon/article8872735.ece
- "Focus on Rehab of Mentally-ill". The Indian Express (7 March 2016). பார்த்த நாள் May 23, 2016.
- http://timesofindia.indiatimes.com/city/chennai/Sarada-Menon-gets-Avvaiyar-award/articleshow/53294492.cms
- http://www.thehindu.com/news/cities/chennai/mother-teresa-award-for-dr-sarada-menon/article9268961.ece