எதிரொலி

ஒலிமுதல் ஒன்றிலிருந்து பிறப்பிக்கப்பட்ட ஒலி குறுகிய நேரத்தில் மீண்டும் மீண்டும் கேட்கும் தோற்றப்பாடு எதிரொலி (Echo) எனப்படும்.

எதிரொலி ஏற்படுவதற்கான நிபந்தனைகள்

கேட்பவரே ஒலி முதலாக இருக்கும் போது எதிரொலி கேட்பதற்கான குறைந்த தூரம்
  • ஒலி தெறிப்படைந்து வந்து மீண்டும் கேட்கக்கூடியதாக உரிய தூரத்தில் தடை அமைந்திருத்தல் வேண்டும். அதாவது மனித மூளையில் ஒருமுறை கேட்ட ஒலி 1/10 செக்கன்களுக்கு நிலைத்திருக்கும். எனவே 1/10 செக்கன் நேர இடைவெளிக்குள் கேட்கப்படும் அடுத்த ஒலியை மூளையால் புலனுணர முடியாது.வளியில் ஒலியின் வேகம் செக்கனுக்கு 330 மீட்டர் ஆகும்.எனவே கேட்பவரிடமிருந்து ஒலி முதலுக்கும் தடைக்கும் இடையில் குறைந்தது 16.5 மீட்டர் மேலதிக பயணத் தூரம் உடையதாக இருக்க வேண்டும்.
  • தெறிப்படைந்து வரும் ஒலி கேட்கக்கூடிய அளவு உரப்பு உடையதாக இருக்க வேண்டும்.

எதிரொலியின் பயன்கள்

எதிரொலிமானி பொருத்தப்பட்ட கப்பல்

ஒலித்தெறிப்பின் விளைவாக ஏற்படும் எதிரொலி பல உபகரணங்களிலும் சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.

  • கடலில் கடலடிப்பறைகளின் அமைவிடம், மீன்கூட்டம் உள்ள ஆழம்,கடலின் ஆழம் என்பவற்றை அறிய எதிரொலிமானி (Echo sounder) பயன்படுத்தப்படுகின்றது. இது கழியொலியை கடலின் அடியில் சேலுத்தி அது ஏற்படுத்தும் எதிரொலிக்கான நேரத்தைக் கொண்டு சோனர் (SONAR- SOund NAvigation and Ranging) முறையில் ஆழங்களை மதிப்பிடுகிறது.
மருத்துவ அலகிடலி உபகரணம்
  • உடல் உள்ளுறுப்பு நோய்களை அறியப் பயன்படும் கழியொலி அலகிடலிகள் (Ultra Sound Scanners).கழியொலிகளை உட்செலுத்திப் பெறப்படும் எதிரொலி மூலம் செயற்படுகின்றது.

எதிரொலி தடுக்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்கள்

  • கேட்போர் கூடம், திரை அரங்கு மற்றும் நாடக அரங்குகளில் எதிரொலி தடுக்கப்படுவதற்காக அரங்கின் பின்சுவர் ஒலியைத் தெறிக்காமல் இருக்கும்படி ஒப்பமற்றதாக செய்யப்பட்டிருக்கும்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.