எண்ணிமக்கலன் வடிவம்
எண்ணிமக்கலன் வடிவம் (Digital container format) என்பது மீகோப்பு வடிவம் ஆகும். இது தரவின் வேறுபட்ட கூறுகளை, விவரக்கூற்றாக விவரிக்கிறது. அத்துடன் கணினிக் கோப்பில், மீதரவும் உடன் இருக்கிறது. [1] இந்த வடிவம் அதிகமாக பல்லூடக பயன்பாட்டு மென்பொருட்களில் அதிகம் பயன்படுகிறது. இந்த வடிவமானது, அதன் தரவு, மீதரவு ஆகியவற்றின் குறியாக்கத்தை விவரிப்பதில்லை. ஏனெனில், இக்கலவடிவில் குறியாக்கத்தை புரிந்து கொள்ளத் தேவையான செய்வழி(algorithm) அமைக்கப்படாமல் இருப்பதே காரணமாக இருக்கலாம். எண்ணிமக்கல வடிவம் என்பது எத்தரவையும், தன்னக்கத்தே சுற்றி வைத்துள்ள தரவு உறையாகத் திகழ்கிறது. எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட்டின் டிஎல்எல்(DLL) கோப்புகளைக் கூறலாம். ஊடகத் தன்மைக்கு ஏற்ப, ஒவ்வொரு வகை ஊடகத்திற்கும், ஒவ்வொரு வகையான எண்ணிமக்கலன் வடிவங்கள் உள்ளன.
எண்ணிமக்கலன் வடிவங்கள்
- AIFF, WAV, XMF என்பன ஒலிக்கோப்புகளுக்கான வடிவங்கள் ஆகும்.
- FITS, TIFF என்பது நிழற்படங்களுக்கு மட்டும் பயன்படும் வடிவங்கள் ஆகும்.
- Matroska (MKV) என்பது திறநிலை கலன் ஆகும். இதில் எத்தகைய ஊடகத்தையும் பேணலாம்.
- ogv.ogg என்பதும் திறநிலை எண்ணிமக்கல வடிவங்கள் ஆகும்.
- IFF என்பது எந்த இயக்குதளத்திலும் பயன்படும் முதல் கலவடிவம் ஆகும்.
- MP4, 3GP, AVI, FLV, F4V, MJ2, RM, ASF என இன்னும் பிற வடிவங்களும் உள்ளன.
மேற்கோள்கள்
- Ho, Anthony T. S.; Li, Shujun (20 May 2016). Handbook of Digital Forensics of Multimedia Data and Devices, Enhanced E-Book. John Wiley & Sons. பக். 146–(?). பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781118757079. இணையக் கணினி நூலக மையம்:953319457. https://books.google.com/books?id=pDU0DAAAQBAJ&pg=PT146&dq=container+format.
வெளியிணைப்புகள்
- இணையவழி நிகழ்பட கோப்பின் வடிவங்காட்டும் கருவி - Designed primarily for CCTV video formats and codecs
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.