எண் (இலக்கணம்)
தமிழ் இலக்கணத்தில் எண் என்பது எண்ணிக்கையைக் குறிப்பதாகும். இஃது ஒருமை, பன்மை என இரு வகைப்படும்.
ஒன்றனைக் குறிப்பது ஒருமை.
ஒன்றுக்கு மேற்பட்ட பாெருள்களைக் குறிப்பது பன்மை எனப்படும்.
ஒருமை பன்மை
மகன் மக்கள்
அது அவை
மலர் மலர்கள்
மூவிடப்பெயர்களும் ஒருமை, பன்மை என இருவகைப்படும்.
தன்மை ஒருமை - நான், யான்
தன்மைப் பன்மை - நாம், யாம்
முன்னிலை ஒருமை - நீ
முன்னிலைப் பன்மை - நீர், நீவிர், நீயிர், நீங்கள்
படர்க்கை ஒருமை - தான்
படர்க்கைப் பன்மை - தாம், தாங்கள்
பார்வை நுால்கள்
- ஒன்பதாம் வகுப்பு தமிழ்ப் பாடநுால்- மூன்றாம் பருவம்- ப.எண்: 16-1
முதல் பதிப்பு: 2013, வெளியீடு: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், சென்னை-6.
2. தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி?, ப.எண்: 22,23
எஸ்.ஆர். காேவிந்தராஜன், எம்.ஏ., பி.டி.