எடித் அப்போட்
எடித் அப்போட் (Edith Abbott; செப்டம்பர் 26, 1876 – ஜூலை 28, 1957), ஐக்கிய அமெரிக்க நாட்டின் பொருளியலாளர், கல்வியியலாளர் மற்றும் எழுத்தாளராவார். இவர் அமெரிக்காவிலுள்ள நெப்ராசுக்கா-கிரீன் தீவில் பிறந்தார்.[1] இவா் சமூகப் பணியில் முதுகலை பட்டம் மற்றும் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவா் சிகாகோ பல்கலைக் கழகம் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் ஆகியவற்றில் பயின்றாா்.
எடித் அப்போட் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 26, 1876 கிரீன் தீவு, நெப்ரசுக்கா, ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | சூலை 28, 1957 80) கிரீன் தீவு, நெப்ரசுக்கா | (அகவை
பணி | பொருளியியலாளர், சமூக செயற்பாட்டாளர், எழுத்தாளர் |
பொருளியல் பயின்ற இவர், சமூகப் பணியில் ஒரு முன்னோடியாவாவார். கல்வியில் மனித நேயத்துடன் கூடிய கல்வியின் அவசியத்தை வலியுறுத்தியவராவார். சமூக சீர்திருத்தத்தில் முக்கிய செயற்பாட்டாளராக விளங்கினார்.[2] இளங்கலை பட்டப்படிப்பளவில் சமூகப்பணி கல்வியை செயற்படுத்தும் பொறுப்பினை ஏற்றிருந்தார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் இவரது சமூக சீர்திருத்தப் பணி தொடர்பாக எதிர்ப்புகளைச் சந்திக்க நேர்ந்தாலும், இறுதியில் தனது பணியில் வெற்றியடைந்தார். 1924 இல் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் துறைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐக்கிய அமெரிக்காவின் பல்கலைக்கழகத் துறைத் தலைவர் பதவிவகித்த முதல் பெண் என்ற சிறப்பினைப் பெற்றார்.[3]
மேற்கோள்கள்
- "Abbott, Edith." American Women Writers: A Critical Reference Guide from Colonial Times to the Present. Gale. 2000.
- "Abbott, Edith - Social Welfare History Project" (in en-US). Social Welfare History Project. December 13, 2010. http://socialwelfare.library.vcu.edu/people/abbott-edith/.
- "Edith Abbott | University of Chicago - SSA".
வெளியிணைப்புகள்
- Harvard University Library Open Collections Program. Women Working, 1870–1930, Edith Abbott (1876–1957). A full-text searchable online database with complete access to publications written by Edith Abbott.
- Edith and Grace Abbott, Papers at the University of Nebraska-Lincoln
- Abbott Family papers at Nebraska State Historical Society
- "indian woman social workers". பார்த்த நாள் 21 சூலை 2017.