எசாம் சரஃப்

எசாம் அப்டெல்-ஆசிஸ் சரஃப் (Essam Sharaf, அரபி: عصام عبد العزيز شرف, பிறப்பு : சூலை 12, 1952) ஓர் எகிப்திய அரசியல்வாதி ஆவார். இவர் எகிப்தின் பிரதமராக மார்ச்சு 2011 முதல் பதவியில் உள்ளார். இதற்கு முன்னர் இவர் போக்குவரத்துத் துறை அமைச்சராக 2004 முதல் 2005 வரை பதவியில் இருந்தார்.

எசாம் சரஃப்
எகிப்து பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 மார்ச்சு 2011
குடியரசுத் தலைவர் முகமது உசைன் தன்டாவி (பொறுப்பு)
முன்னவர் அகமது சஃபிக்
தனிநபர் தகவல்
பிறப்பு 12 சூலை 1952 (1952-07-12)
படித்த கல்வி நிறுவனங்கள் கெய்ரோ பல்கலைக்கழகம்
பர்டியூ பல்கலைக்கழகம்

பின்னணி

சரஃப் எகிப்திலுள்ள கிசா நகரத்தில் 1952ஆம் ஆண்டு பிறந்தார்.[1] இவர் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் கட்டடவியல் பொறியியலில் இளநிலை அறிவியல் (B.Sc.) பட்டம் பெற்றார். அதன் பின்னர் பர்டியூ பல்கலைக்கழகத்தில் தனது முதுகலைப் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் பெற்றார்.[2]

அரசியல்

2011 எகிப்தியப் போராட்டங்களின் போது சரஃப் அரசியலில் இருந்தார். அப்போராட்டங்களின் போது இவர் புரிந்த பணிகள் இவரை அடுத்த பிரதமராக்கியது. இவர் இராணுவக் குழுவால் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மேற்கோள்கள்

  1. "Meet Essam Sharaf: Egypt's first post-revolution Prime Minister". Aharm online. பார்த்த நாள் 4 March 2011.
  2. "Purdue University Profile of Essam Sharaf". பார்த்த நாள் 3 March 2011.
  3. "Egypte: le Premier ministre remplacé, satisfaction des opposants" (French). Euronews (3 March 2011). பார்த்த நாள் 3 March 2011.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.