எக்ஸ்-மென்: அப்போகலிப்ஸ்

எக்சு-மென்: அபொகலிப்சு (ஆங்கிலம்: X-Men: Apocalypse, தமிழ்: எக்சு-மனிதர்கள்: பேரழிவு) மாவல் சித்திரக்கதைகளில் தோன்றும் எக்ஸ்-மென் கதாபாத்திரங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட 2016 ஆண்டைய அமெரிக்க சூப்பர்கீரோத் திரைப்படமாகும். இது 2014இல் வெளியான எக்சு-மென்: டேசு ஒப் பியூச்ச பாசுற் (ஆங்கிலம்: X-men : Days of Future Past , தமிழ்: எக்சு-மனிதர்கள்: கடந்த காலத்தின் எதிர்காலம்) திரைப்படத்தில் தொடர்ச்சியும், எக்சு-மென் படவரிசையின் ஒன்பதாவது திரைப்படமும் ஆகும். பிறயன் சிங்கரின் (Bryan Singer) இயக்கம் மற்றும் சைமன் கின்பேக்கின் (Simon Kinberg) திரைக்கதையில் வெளியாகும் இத்திரைப்படத்தின் கதையை இடான் காரிசு (Dan Harris), மைக்கல் உடோகேற்றி (Michael Dougherty, கின்பேக் மற்றும் சிங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். இதில் சேம்சு மெக்கவோய் (James McAvoy), மைக்கல் பாசுபெண்டர் (Michael Fassbender), செனிபர் இலாரன்சு (Jenifer Lawrence),நிகோலசு கோல்ற்று (Nicholas Hoult), ஒசுகார் ஈசாக்கு (Oscar Isaac), உரோசு பேண் (Rose Byrne), இரை செறிடன் (Tye Sheridan), சோபி ரேணர் (Sophie Turner), அலெக்சாண்ட்றா சிப்பு (Alexandra Shipp), கோடி சிமிற்-மெக்பீ (Kodi Smit-McPhee), எவன் பீற்றேசு (Evan Peters), லூகசு இரில் (Lucas Till), பென் காடி (Ben Hardy), இலானா கொண்டோர் (Lana Condor), ஒலிவியா மண் (Olivia Munn) ஆகியோர் நடிக்கின்றனர்.

எக்சு-மென்: அபொகலிப்சு
X-Men: Apocalypse
இயக்கம்பிறயன் சிங்கர்
தயாரிப்புகெவின் பைசீ
திரைக்கதைஎட்கர் இறைட்
சோ கோணிசு
அடம் மெக்கே
போல் இறடு
நடிப்புசேம்சு மெக்கவோய்
மைக்கல் பாசுபெண்டர்
செனிபர் இலாரன்சு
நிகோலசு கோல்ற்று
ஒசுகார் ஈசாக்கு
உரோசு பேண்
இரை செறிடன்
சோபி ரேணர்
அலெக்சாண்ட்றா சிப்பு
கோடி சிமிற்-மெக்பீ
எவன் பீற்றேசு
லூகசு இரில்
பென் காடி
இலானா கொண்டோர்
ஒலிவியா மண்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடு9, மே 2016 (லண்டன்)
27, மே 2016 (அமெரிக்கா)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

டிசம்பர் 2013இல் கின்பேக், உடொகெற்றி, காரிசு ஆகியோர் எழுத்தாக்கக்குழுவில் இணைக்கப்பட்டதுடன் இத்திரைப்படத்தின் வெளியீடு சிங்கரால் அறிவிக்கப்பட்டது. நடிப்புத் தேர்வுகள் அக்டோபர் 2014இல் ஆரம்பமானதுடன் படப்பிடிப்புகள் ஏப்பிரல் 2015இல் கனடாவின், மொன்றியல் நகரில் தொடங்கப்பட்டன.

இத்திரைப்படமானது 9, மே 2016 அன்று லண்டனிலும் 27, மே 2016 அன்று அமெரிக்காவிலும் வெளியானது.

நடிகர்கள்

  • சேம்சு மெக்கவோய் - பேராசிரியர் சாள்சு சேவியர்/ பேராசிரியர் எக்சு (Professor Charles Xavier/ Professor X)
  • மைக்கல் பாசுபெண்டர் மற்றும் அயன் மெக்கெலன் (Ian McKellen) - எரிக்கு இலென்சர்/ மக்னீற்றொ (Eric Lensherr/ Magneto)
  • செனிபர் இலாரன்சு - இறேவன் இடாக்கொய்ம்/ மிசுற்றீக்கு (Raven Darkhölme/ Mystique)
  • நிக்கோலசு கோல்ற்று - காங்கு மெக்கோய்/ மிருகம் (Henry "Hank" McCoy/ Beast)
  • ஒசுகார் ஈசாக்கு - என் சபா நூர்/ அபொகலிப்சு (En Sabah Nur/ Apocalypse)
  • உறோசு பேண் - மொய்றா மெக்ரகேடு (Moira McTaggert)
  • இரை செறிடன் - இசுகொற்று சமேசு/ சைக்ளோப்சு (Scott Summers/ Cyclops)
  • சோபி ரேணர் - சீன் கிறே (Jean Grey)
  • அலெக்சாண்ட்றா சிப்பு - ஒறோறோ மன்றோ/ சூறாவளி (Ororo Munroe
  • கோடி சிமிற்-மெக்பீ - கேட்டு வாக்னர்/ நைட்க்ரோலர் (Kurt Wagner/ Nightcrawler)
  • எவன் பீற்றேசு - பீற்றர் மெக்சிமோப்/ குயிக்சில்வர் (Peter Maximoff/ Quicksilver)
  • லூகசு இரில் - அலெக்சு சமேசு/ காவொக் (Alex Summers/ Havok)
  • பென் காடி - வோறன் வேத்திங்க்ற்றன் III/ சம்மனசு (Warren Worthington III/ Angel): காடி இதற்காக உள்ளக விண்வீழ் (Indoor Skydiving) விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டார்.
  • இலானா கொண்டோர் - சூபிலேசன் இலீ/ சூபிலீ (Jubilation Lee/ Jubilee)
  • ஒலிவியா மண் - பெற்சி பிறடொக்கு/ சைலொக்கு (Betsy Braddock/ Psylocke)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.