உள்ளம் கேட்குமே

உள்ளம் கேட்குமே (Ullam Ketkumae) திரைப்படம் 2005-ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஜீவா எழுதி, இயக்கினார். இத்திரைப்படத்தில் ஷாம், ஆர்யா, லைலா, அசின், பூஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். பல தாமதங்களுக்குப் பிறகு, 2005-ஆம் ஆண்டு வெளியான இப்படம், ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. 30 மார்ச் 2006-ஆம் தேதி, தெலுங்கு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ப்ரேமின்சி சூடு என்ற பெயரில் வெளியானது.[1]

உள்ளம் கேட்குமே
இயக்கம்ஜீவா
தயாரிப்புமஹாதேவன் கணேஷ், உஷா வெங்கட்ரமணி
கதைஜீவா
இசைஹாரிஸ் ஜெயராஜ்
நடிப்புஷியாம்
ஆர்யா
லைலா
அசின்
பூஜா
ஒளிப்பதிவுஜீவா
படத்தொகுப்புவி.டி விஜயன்
வெளியீடு3 ஜூன் 2005
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

  • ஷாம் - ஷாம்
  • ஆர்யா - இமான்
  • லைலா - பூஜா
  • அசின் - ப்ரியா
  • பூஜா - ஐரீன்
  • முரளி - பூஜாவின் தந்தை
  • ராஜிவ் - ஐரீனின் தந்தை
  • லலிதா - இமானின் தாய்
  • ராஜு சுந்தரம் - ராஜு
  • ஸ்ரீநாத் - பத்சு

கதைச்சுருக்கம்

இந்த படம் 5 நண்பர்களை சுற்றி எடுக்கப்பட்டதாகும் - ஷாம் (ஷாம்), இமான் (ஆர்யா), பூஜா (லைலா), ப்ரியா (அசின்), ஐரீன்(பூஜா). பல ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த நண்பர்கள், இமான் திருமணத்திற்காக ஒன்று கூடுகிறார்கள்.

இமானின் திருமணத்திற்கு அமெரிக்காவிலிருந்து பூஜா புறப்படும் காட்சியிலிந்து படம் துவங்குகிறது. அதே நேரம், இமானின் திருமணத்திற்கு அனைத்து நண்பர்களும் வந்து உதவி செய்து, சக நண்பர்களை பார்க்க ஆர்வ இருந்தனர். இமானும் ஐரீனும் பல நாட்களுக்கு பிறகு சந்திக்கிறார்கள். கல்லூரி நாட்களில், இமானும் ஐரீனும் காதலித்திருந்தாலும் ஒன்று சேருவதற்கான சூழல் அமையவில்லை.

மற்றொரு கடந்தகால காட்சியில், ஷாம் ப்ரியாவை விரும்ப, பூஜா ஷாமை விரும்பினாள். பூஜா ஷாமை விரும்புவது ப்ரியாவிற்கு தெரியவர, தன்னை காதலித்த ஷாமை நிராகரித்துவிட்டாள்.

இப்போது நிகழ்காலத்தில், அனைவரும் இமான் திருமண விழாவில் காத்திருக்க, பூஜா வந்து சேர்ந்தாள். விளையாட்டு பிள்ளையாக இருந்த பூஜா, அடிப்படையில் மாறி பக்குவமான பெண்ணாக இருந்தாள். தான் இத்தனை நாட்களாக பூஜாவுடன் இருப்பதை தவறவிட்டுவிட்டோம் என்று கருதினான் ஷாம். இமான் திருமணம் நன்றாக முடிய, மறுநாள் பூஜா அமெரிக்காவிற்கு கிளம்புவதிற்குள் தான் கல்லூரி நாட்களில் கொடுக்கத்தவறிய காதலர் அட்டையை ஷாமிடம் கொடுத்தாள் பூஜா. தனக்கு ஏற்றவள் ப்ரியா இல்லை, பூஜா தான் என்று ஷாம் பூஜாவின் காதலை ஏற்றுக்கொள்ள படம் நிறைவுபெறுகிறது.

இசை

இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆவார். வைரமுத்து, பா. விஜய் இப்படத்தின் பாடல்களை எழுதினர்.

தமிழ்ப் பாடல்கள் பட்டியல்[2]
வரிசை

எண்

பாடல் வரிகள்
1 என்னை பந்தாட வைரமுத்து
2 கனவுகள் பா. விஜய்
3 ஓ மனமே வைரமுத்து
4 மழை மழை வைரமுத்து
5 தோ தோ வைரமுத்து
6 லேகோ லைமா பா.விஜய்

தயாரிப்பு

இந்த திரைப்படத்தில் உள்ள 5 பாடல்களுக்கும் ராஜு சுந்தரம் நடனம் அமைத்தார். அதில் நியூஸிலாந்தில் எடுத்த ஒரு பாடலும் அடங்கும்.[3]

மேற்கோள்கள்

  1. "19 November 2006 at the Wayback Machine".
  2. "www.saavn.com".
  3. "www.indiaglitz.com".

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.