உல்லாஸ் காரந்த்

உல்லாஸ் காரந்த் ஒரு இந்திய சூழியலாளர், விலங்கியலாளார் மற்றும் புலிகளைப் பற்றி ஆராய்ச்சி செய்பவர். இவர் பிரபல கன்னட இலக்கிய மேதை சிவராம காரந்தின் மகன். இவர் எழுதிய தி வே ஆஃப் தி டைகர் என்னும் நூல் தமிழில் ‘கானுறை வேங்கை’ என்ற தலைப்பில் சு. தியடோர் பாஸ்கரன் மொழியாக்கத்தில் வெளிவந்துள்ளது. இவர் நகாரஹோலே காட்டில் பணியாற்றுகிறார்

உல்லாஸ் காரந்த்
ಕೋಟಾ ಉಲ್ಲಾಸ ಕಾರಂತ
உல்லாஸ் காரந்த்
பிறப்புகர்நாடகா
வாழிடம்பெங்களூர்
தேசியம்இந்தியர்
துறைகாடுயிர் பாதுகாவல், புலாலுண்ணி உயிரியல்
பணியிடங்கள்காட்டுயிர் ஆராய்ச்சி மையம், காட்டுயிர் பாதுகாப்பு அமைப்பு
கல்வி கற்ற இடங்கள்தேசிய தொழில்நுட்பக் கழகம், சூரத்கல்
அறியப்படுவதுபுலிகள் பாதுகாவல்
விருதுகள்பாதுகாவல் தலைமைப்பண்புக்கான ஜெ. பால் கெட்டி விருது

வாழ்க்கை

உல்லாஸ் கரந்த் சிவராம கரந்தின் மகன். குந்தாபுராவில் பிறந்தார். பொறியியல் படித்தார். காட்டில் அனாதையாக விடபப்ட்ட இரு புலிக்குட்டிகளை அவரது அப்பா கொண்டு வந்து வளர்த்ததை கண்டு வனவிலங்கியலில் நாட்டம் கொண்டார். தென் கர்நாடகத்தின் சூழியல் பற்றி அவரே ஆராய்ச்சிகள் மேர்கொண்டார். 1983ல் ஸ்மித்சோனியன் ஆய்வுக்குழு விடன் தொடர்புகொண்டு அமெரிக்கா சென்றார். 1987 அமெரிக்க தேசிய வனவிலங்கு ஆய்வு அமைப்புடன் தொடர்புகொண்டு பயிற்சி பெற்றார். 1988ல் அதில் முனைவர் பட்டம் பெற்றார்

ஆய்வுகள்

புலிகளைப்பற்றிய ஆய்வுக்காகவே உல்லாஸ் கரந்த் போற்றப்படுகிறார். நகாரஹோலேயின் புலிகளைப்பற்றிய இவரது ஆய்வுகள் பல நூல்களாக வெளிவந்துள்ளன.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.